விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தற்போது ஸ்ருதியும் மனம் மாறி மீண்டும் அண்ணாமலை வீட்டிற்க்கு செல்கிறார். இதனால் ஸ்ருதியின் தந்தை வாசுதேவன் என்ன செய்வது? என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மீனாவை பிச்சை எடுக்க சொன்ன ஸ்ருதியின் தந்தை வாசுதேவனை முத்து அடித்து உதைக்கிறார். ஆனால் இந்த விஷயம் எதுவுமே தெரியாத ஸ்ருதி கோபித்துக் கொண்டு தனது தந்தை வீட்டில் சென்று விடுகிறார். பின்னர் மீனா ஸ்ருதியை சந்தித்து உண்மைகளை கூறுகிறார். ஸ்ருதியும் மனம் மாறுகிறார். தொடர்ந்து ஸ்ருதி காரில் வந்து கொண்டிருக்கும் நிலையில் அவரின் முன்னாள் காதலர் ரோட்டில் கையைப் பிடித்து இழுத்து அவரிடம் சண்டை செய்கிறார்.
அந்த நேரம் பார்த்து அங்கு வரும் முத்து, ஸ்ருதியை அவனிடமிருந்து காப்பாற்றி விடுகிறார். மேலும், “நான் செய்த தவறுக்காக என் தம்பியை தண்டித்து விடாதே” என்று கூறுகிறார். நேராக வீட்டிற்கு வரும் ஸ்ருதி, நீங்கள் தான் முதலில் மீனாவை அசிங்கமாக பேசியிருக்கிறீர்கள் என்று சொல்லி சண்டை போட்டுவிட்டு ரவியின் வீட்டில் கிளம்புகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television