போதை தலைக்கேறி ரோஹிணி மேல் விழுந்த முத்து.! கைகூப்பி கதறி அழும் மீனா.!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் குடித்துவிட்டு வீட்டிற்கு வரும் முத்து தனது அண்ணன் மனைவியான ரோகிணியிடம் பிரச்சனை செய்கிறார். இதை பார்த்து மீனா தற்போது கையெடுத்து கும்பிட்டு கதறி அழுகி கொண்டிருக்கிறார். இனிமேல் குடித்துவிட்டு இதுபோல் செய்ய வேண்டாம் என்று மீனா முத்துவிடம் கெஞ்சி கொண்டிருக்கிறார். அந்த சோகமான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் ஒளிபரப்பாக தொடங்கிய சில நாட்களிலேயே டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம் பிடித்திருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

போதை தலைக்கேறி ரோஹிணி மேல் விழுந்த முத்து.! கைகூப்பி கதறி அழும் மீனா.! 1

இந்த சீரியலில் ஹீரோவாக இருக்கும் முத்துவிற்கும் பூமாலை கட்டும் மீனாவிற்கும் திருமணம் நடந்திருந்தது. ஆரம்பத்தில் மீனாவுடன் வாழப் பிடிக்காமல் இருந்த முத்து பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மீனாவை ஏற்றுக் கொள்ள தொடங்கினார். இந்த நிலையில் முத்துவிற்கு தற்போது ஒரு பிரச்சனை எழுந்திருக்கிறது. அதில் கந்து வட்டிக்காரன் செய்த சூழ்ச்சியால் முத்துவிற்கு சில பிரச்சனைகள் ஏற்பட்டது. இந்த விஷயம் ஏற்கனவே மீனாவுக்கு தெரிந்திருந்தும் அவர் அதை தன்னிடம் மறைத்து விட்டார் என்று சொல்லி முத்து மீனாவிடம் சண்டை போடுகிறார். இதனால் முத்து தற்போது அளவுக்கு அதிகமாக குடிக்க தொடங்கி இருக்கிறார். தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் குடித்துவிட்டு வீட்டிற்கு வரும் முத்து சமீபத்தில் திருமணம் ஆன தனது அண்ணன் மனைவி ரோகிணியிடம் சண்டை போடுகிறார்.

மேலும் போதை தலைக்கேறிய அவர், ரோகிணி மேல் விழுவது போல சென்று சோபாவில் விழுகிறார். இதைப் பார்த்த மீனா தற்போது முத்துவை அழைத்து, நீங்கள் இதுபோல் தினமும் குடித்துவிட்டு வந்தால், புதிதாக திருமணமாகி வந்த பெண் உங்களைப் பற்றி என்ன நினைப்பார்? தவறாக நினைக்க மாட்டாரா? தயவுசெய்து எனக்காக இனிமேல் குடிப்பதை நிறுத்துங்கள் என்று சொல்லி கை கூப்பி முத்து விடம் கதறி அழுகிறார். இதனால் முத்து மனம் மாறுவானா என்பது தெரியவில்லை. நீங்களும் தற்போது வெளியாக இருக்கும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்