பாக்யாவை மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்த பழனிச்சாமியின் அம்மா.! ப்ரோமோ இதோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தற்போது பழனிச்சாமியின் தாயார் பாக்யாவை பொண்ணு கேட்டு அவர் வீட்டிற்கு செல்ல இருப்பதாக கூறிக் கொண்டிருக்கிறார். இதற்கு பழனிச்சாமி தற்போது அவரது தாயருக்கு அதிர்ச்சி பதில் ஒன்றை அளித்திருக்கிறார். அந்த அதிரடியுடன் தற்போது இந்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களை காட்டிலும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர். அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்ற ஆர்வத்துடன் கதை நாளுக்கு நாள் நகர்ந்து வருகிறது. பாக்யாவின் மாமியாராக இருக்கும் ஈஸ்வரி காசிக்கு சென்று திரும்பியதில் இருந்து வித்தியாசமாக நடந்து கொள்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாக்யாவை மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்த பழனிச்சாமியின் அம்மா.! ப்ரோமோ இதோ 1

விளம்பரம்

அதேசமயம் பாக்யா, இனியா படிக்கும் கல்லூரியிலேயே கல்லூரிக்கு சேர்ந்திருக்கிறார். இந்த விஷயம் தற்போது ஈஸ்வரிக்கும் தெரியவந்து அவரும் சம்மதம் தெரிவித்து விட்டார். இது ஒருபுறம் இருக்க பாக்யா கல்லூரிக்கு செல்வது, கேண்டீன் கான்ட்ராக்ட் எடுப்பது, சமையல் காண்ட்ராக்ட் எடுப்பது, ஈஸ்வரி மசாலா நடத்துவது என்று பன்முக திறமையாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் ஆங்கிலம் கற்றுக் கொள்வதற்காக அவர் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பிற்கும் செல்கிறார். அங்கு அவருக்கு பழனிச்சாமி என்பவருடன் நட்பு ஏற்படுகிறது. இந்த நட்பு பற்றி பழனிச்சாமியின் தாயாரும் பாக்கியலட்சுமி முன்னாள் கணவர் கோபியும் தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இருவரும் காதலித்து வருவதாக இவர்கள் இருவருமே தப்பு கணக்கு போட்டுக் கொண்டிருக்கின்றனர். பழனிச்சாமியின் தாயார் தற்போது பழனிச்சாமியிடம் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்.

தொடர்புடையவை  BiggBoss-ல் இருந்து வந்த பின்னர் ஜனனி நடத்திய முதல் போட்டோஷூட்.! குவியும் லைக்குகள்.!

பாக்யாவை மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்த பழனிச்சாமியின் அம்மா.! ப்ரோமோ இதோ 3

விளம்பரம்

அப்போது உனக்கென்று ஒருத்தி வேண்டும், நானும் போய்விட்டால் உன்னை யார் பாத்துக்குவா? பேசாமல் பாத்தியா வீட்டுக்கு சென்று பேசட்டுமா என்று கேட்கிறார். அதற்கு பழனிச்சாமி என்ன பேச போறீங்க என்று கேட்க, பாக்யாவை உனக்கு பிடித்திருந்தால் உங்கள் இருவரின் திருமணம் பற்றி அவங்க வீட்டில் பேசட்டுமா என்று பழனிச்சாமியின் தயார் கேட்கிறார். அதற்கு உடனே இப்படி ஒரு விஷயத்தை நினைத்துக் கூட பார்க்காத, யார்கிட்டயும் போய் பேசிடாத, நாங்க நல்ல நண்பர்கள், நண்பர்களாகவே இருந்துட்டு போறோம் என்று பழனிச்சாமி கூறுகிறார். இப்படியாக இந்த ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment