‘சிறகடிக்க ஆசை’ சீரியலின் ஹிந்தி ப்ரோமோ வெளியானது.! சீரியலை டோட்டல் டேமேஜ் செய்துள்ள ஹிந்தி ரீமேக் .!

வெளியிட்டது

விஜய் டிவியின் நம்பர் ஒன் சீரியலாக ஓடிக்கொண்டிருக்கும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலின் ஹிந்தி ரீமேக் தற்போது உருவாகி வருகிறது. அதற்கான முதல் ப்ரோமோவை சீரியல் குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். அதே பூக்கடை, அதே டாக்ஸி, ஹீரோயினுடன் மோதலுடன் ஆரம்பிக்கும் காதல் என்று தமிழ் ப்ரோமோவை அப்படியே காப்பி அடித்து ஹிந்தி ப்ரோமோ எடுக்கப்பட்டிருக்கிறது. விஜய் டிவி மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் நம்பர் ஒன் சீரியலாக கலக்கி வருகிறது ‘சிறகடிக்க ஆசை’ சீரியல். முத்து – மீனா ஜோடியின் ரொமான்ஸ் காட்சிகளுக்கும், கெமிஸ்ட்ரிக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

'சிறகடிக்க ஆசை' சீரியலின் ஹிந்தி ப்ரோமோ வெளியானது.! சீரியலை டோட்டல் டேமேஜ் செய்துள்ள ஹிந்தி ரீமேக் .! 1
பூக்கடை நடத்தி வரும் மீனா, டாக்ஸி டிரைவராக இருக்கும் முத்துவை திருமணம் செய்து கொள்கிறார். ஆரம்பத்தில் குடித்துவிட்டு ரகளை செய்யும் முத்து பின்னர் திருந்தி தனது மனைவியுடன் வாழத் தொடங்குகிறார். ஆனால் ஒரு குழப்பமான கூட்டு குடும்பத்திற்கு செல்லும் மீனா அங்கு சந்திக்கும் பிரச்சினைகள் என்ன? முத்து அவரை எப்படி காப்பாற்றுகிறார்? என்பது குறித்த கதை தான் இந்த சீரியல். தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கும் இந்த சீரியலை தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்து இருக்கின்றனர். ‘உத்னே கி ஆஷா’ என்று அந்த சீரியலுக்கு பெயரிடப்பட்டிருக்கிறது.


விரைவில் ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் இந்த சீரியல் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில், தற்போது அதற்கான முதல் ப்ரோமோவை வெளியிட்டு இருக்கின்றனர். தமிழைப் போலவே இந்த சீரியலிலும் ஹீரோயின் பூக்கடை நடத்தி வருகிறார். அதேபோல ஹீரோ ரவுடியாக இருக்கிறார். இவர்களுக்குள் ஏற்படும் அறிமுகத்தை தற்போது ப்ரோமோவாக வெளியிட்டுள்ளனர். நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Star Plus

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்