Off Screen-ல் தனது அனைத்து மகன்களுக்கும் சோறு ஊட்டி விடும் சிறகடிக்க ஆசை விஜயா.! வீடியோ உள்ளே.!

வெளியிட்டது

‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் விஜயா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வரும் அனிலா ஸ்ரீகுமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புது வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். அதை பார்க்கும் பொழுது சீரியலில் தான் வில்லி நிஜத்தில் பாசமான அம்மா என்பதை இது காட்டுகிறது. அந்த வீடியோவில் தனது மகன்கள் மற்றும் மருமகள்காளாக நடிக்கும் வெற்றி, தேவா, ப்ரணவ், சல்மா, கோமதி பிரியா ஆகியோருக்கு அனிலா உணவு ஊட்டி கொண்டு இருப்பது போல வீடியோவை பகிர்ந்திருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Off Screen-ல் தனது அனைத்து மகன்களுக்கும் சோறு ஊட்டி விடும் சிறகடிக்க ஆசை விஜயா.! வீடியோ உள்ளே.! 1
விஜய் டிவியின் டாப் ஹிட் சீரியலாக ஓடிக்கொண்டிருக்கிறது ‘சிறகடிக்க ஆசை’ சீரியல். இந்த சீரியலில் வெற்றியும், கோமதி பிரியாவும் முத்து-மீனா என்கிற கதாபாத்திரத்திலும், தேவாவும், சல்மாவும் மனோஜ் – ரோகிணி என்கிற கதாபாத்திரத்திலும், அனிலா ஸ்ரீகுமார் மற்றும் சுந்தர்ராஜன் இருவரும் விஜயா மற்றும் அண்ணாமலை என்கிற கதாபாத்திரத்திலும் ,பிரணவ் மற்றும் பிரீத்தா ஆகிய இருவரும் ரவி – ஸ்ருதி என்கிற கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர். இதில் மாமியார் விஜயா எப்பொழுதும் முத்து மற்றும் மீனா மீது எரிச்சலாக இருப்பது போலவே காட்டப்பட்டு வருகிறது.

 

இந்த நிலையில் பொங்கல் விழாவிற்காக அனைவரும் பாட்டியும் கிராமத்திற்கு சென்று இருக்கின்றனர். அங்கு விஜயா மீனாவிற்கு ஊட்டி விடுவது போன்ற ப்ரோமோ வெளியாகியிருந்தது. இந்த நிலையில் ஆஃப் ஸ்கிரீனில் விஜயாவாக நடித்து வரும் அனிலா ஸ்ரீகுமார் தனது மகன்கள் மற்றும் மருமகள்களாக நடித்து வரும் அனைவருக்கும் சோறு ஊட்டி விடுகிறார். அந்த வீடியோவை மனோஜாக நடித்துவரும் தேவா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இந்த வீடியோவை பகிர்ந்த அவர், “வாழ்க்கைக்கு தேவை பணமோ பொருளோ அல்ல, புரிந்துகொண்டு எந்த சூழ்நிலையிலும் நம்மை விட்டுக் கொடுக்காத, விட்டு விலகாத உண்மையான அன்பு உறவுகள்” என்று பகிர்ந்திருக்கிறார்.


அந்த வீடியோவிற்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்