சிறகடிக்க ஆசை சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் மனோஜின் கேஸ் விஷயமாக வீட்டிற்கு வரும் போலீசார் மீனா பற்றிய ஒரு உண்மையை போட்டு உடைத்து விடுகிறார். மீனாவின் தம்பி இந்த வீட்டிலிருந்து பைக்கை திருடியவர், அதை மன்னித்து மீனாவை இந்த குடும்பத்தினர் ஏற்று கொண்டு உள்ளார்களே என்கிற உண்மையை கூறுகிறார். இதனால் மனமுடைந்து போன மீனா அண்ணாமலையிடம் மன்னிப்பு கேட்டு கதறிக் கொண்டிருக்கிறார். அப்போது அண்ணாமலை இதை ஏன் என்னிடம் நீ முன்னமே சொல்லவில்லை என்று கேட்க, அதற்கான தருணம் எழவில்லை மாமா என்று பதிலளிக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்புக்கு கொஞ்சம் கூட பஞ்சமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர்தான் சிறகடிக்க ஆசை் தற்போது இந்த சீரியலின் ப்ரோமோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில் மனோஜ் ஜீவா என்கிற பெண் மீது வழக்கு ஒன்றை பதிந்திருக்கிறார். அது குறித்து விசாரணை செய்ய போலீசார் வீட்டிற்கு வருகின்றனர். அவர்களுக்கு தண்ணீர் எடுத்துக் கொடுக்கும் மீனாவை பார்த்து நீ எங்கம்மா எங்கே என்று கேட்கிறார் போலீசார். பின்னர் இந்த பெண்ணின் தம்பி தான் இந்த வீட்டிலிருந்து பைக்கை திருடியவர், அவரை மன்னித்து நீங்கள் உங்கள் வீட்டில் மருமகளாக ஏற்றுக் கொண்டிருக்கிறீர்களே, அதுவே பெரிய விஷயம் என்று உண்மைகளை போட்டு உடைத்து விடுகிறார்.

இது தெரிந்த அண்ணாமலை தற்போது நொந்து போகிறார். அவர் மீனாவை அழைத்து இந்த விஷயத்தை ஏன் என்னிடம் முன்னமே கூறவில்லை என்று கேட்க, அதற்கான தருணம் எழவில்லை மாமா என்று சொல்லி மீனா கதறி அழுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Vijay Television