நம்ம சிவாங்கியா இது? ரஞ்சிதமே பாடலுக்கு தர லோக்கல் குத்து குத்திய சிவாங்கி.! வேற லெவல் டான்ஸ்

வெளியிட்டது

சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் பாடல் தான் வாரிசு படத்திலிருந்து ரஞ்சிதமே பாடல். இந்த பாடலை இளைய தளபதி விஜய் அவர்களே பாடியிருந்தார். பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே மில்லியன் கணக்கான பார்வையாளர்களை தாண்டி சாதனை புரிந்திருந்தது இந்த பாடல். பலரையும் முணுமுணுக்க வைத்திருக்கும் இந்தப் பாடலுக்கு பிரபலங்கள் பலரும் ரீல்ஸ் செய்து தனது instagram பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது குக்கு வித் கோமாளி பிரபலம் சிவாங்கியும் ரஞ்சிதமே பாடலுக்கு நடனமாடி அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர் சிவாங்கி. தனது காமெடியான பேச்சுக்களாலும், எதார்த்தமான கேரக்டராலும் பலருக்கும் பிடித்தமான நபராக இருக்கிறார்.

நம்ம சிவாங்கியா இது? ரஞ்சிதமே பாடலுக்கு தர லோக்கல் குத்து குத்திய சிவாங்கி.! வேற லெவல் டான்ஸ் 1

ஆரம்பத்தில் இவர் பாடும் பொழுது குரல் ஒரு மாதிரியாகவும் பேசும்பொழுது வேறு மாதிரியாகவும் இருந்ததால் இவர் பலராலும் விமர்சிக்கப்பட்டார். ஆனால் இவருக்கு திருப்பு முனையாக அமைந்த ஒரு நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி தான். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் சிறியவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு பிரபலமாக இருக்கிறார். மேலும் சில படங்களிலும் நடித்து முடித்திருக்கிறார். சிவகார்த்திகேயனுடன் இணைந்து டான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருக்கு பின்னணி பாடும் வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது. மேலும் பல படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சிவாங்கி அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது வாரிசு படத்தில் இருந்து ரஞ்சிதமே பாடலுக்கு ரீல்ஸ் செய்து அதை வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோ வெளியான சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான பார்வையாளர்கள் அந்த வீடியோவை பார்த்து இருக்கின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண..! Watch the Below Video..!

 

YouTube Video Code Embed Credits:  Sivaangi Krishnakumar

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்