ரஞ்சிதமே பாடலுக்கு தளபதி போலவே மரண குத்தாட்டம் போட்டுள்ள சித்து ஸ்ரேயா ஜோடி.!

சித்துவும் ஸ்ரேயாவும் ரஞ்சிதமே பாடலுக்கு நடனம் ஆடி ரீல்ஸ் செய்துள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சீரியலில் ரீல் ஜோடியாக நடித்து இன்று ரியல் ஜோடியாக வலம் வருபவர்கள் தான் சித்து மற்றும் ஸ்ரேயா. இவர்கள் இருவரும் ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் என்கிற சீரியல் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமானார்கள். திரையில் இவர்கள் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆக, நிஜ வாழ்க்கையிலும் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் சித்து மற்றும் ஸ்ரேயா இருவரும் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்து அதை வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும். 

ரஞ்சிதமே பாடலுக்கு தளபதி போலவே மரண குத்தாட்டம் போட்டுள்ள சித்து ஸ்ரேயா ஜோடி.! 1

விளம்பரம்

மேலும் youtube பக்கத்திலும் தங்களது சேனலை தொடங்கி அதில் Vlogs வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். சித்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார் ஸ்ரேயா. ஏற்கனவே அன்புடன் குஷி, அரண்மனை, நந்தினி போன்ற சீரியல்களில் நடித்து வந்தார். தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ரஜினி சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இருவரும் சமீபத்தில் தங்களது தல தீபாவளியை கொண்டாடி இருந்தனர். பட்டாசுகள் வெடிக்கும் வீடியோக்கள், அவர்கள் தீபாவளிக்காக செய்த ஷாப்பிங் வீடியோக்கள் அனைத்தையும் youtube சேனலை வீடியோக்களாக பதிவிட்டு இருக்கின்றனர். இன்ஸ்டாகிராமில் ஆறு லட்சம் பேர் ஸ்ரேயாவை பின்தொடர்ந்து வருகின்றனர்.

தொடர்புடையவை  வீட்டில் குடில் வைத்து கிறிஸ்துமஸை கொண்டாடி இருக்கும் சுந்தரி சீரியல் நடிகை கேபிரியல்லா.!

ரஞ்சிதமே பாடலுக்கு தளபதி போலவே மரண குத்தாட்டம் போட்டுள்ள சித்து ஸ்ரேயா ஜோடி.! 3

விளம்பரம்

மக்களுக்கு மிகவும் பிடித்த ஜோடியாக இவர்கள் இருவரும் இருக்கின்றனர். சமீபத்தில் கூட தனது காதல் மனைவிக்கு மோரிஸ் கேரேஜ் ரக காரை பரிசளித்திருந்தார் சித்து. மேலும் சித்துவின் பிறந்தநாளுக்காக மாலத்தீவு அழைத்து சென்று பெரிய சர்ப்ரைஸ் செய்து இருந்தார் ஷ்ரேயா. எப்போதும் புது படங்கள் வெளியானால் அதில் வரும் பாட்டுக்களை போலவே உடை அணிந்து இருவரும் நடனம் ஆடுவது வழக்கம். தற்போது அதே போல ரஞ்சிதமே பாடலுக்கு இருவரும் ஆடி ரீல்ஸ் செய்துள்ளனர். அந்த வீடியோவை நீங்களும் காண.! Watch the below Video.! 

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7

விளம்பரம்

Leave a Comment