Categories: சினிமா

நாகார்ஜுனா மகனை சந்தித்த சிவகார்த்திகேயன்!!

வெளியிட்டது
நாகார்ஜுனா மகனை சந்தித்த சிவகார்த்திகேயன்!! 1

சிவகார்த்திகேயனின் படம் மிஸ்டர் லோக்கல், நம்ம வீட்டுப்பிள்ளை ஆகிய படங்கள் இந்த வருடம் வந்தன. இதில் மிஸ்டர் லோக்கல் எதிர்பார்த்தபடி ஓடவில்லை என்றாலும் நம்ம வீட்டு பிள்ளை நல்ல வசூல் பார்த்தது.

இவர் தற்போது ஹீரோ படத்தில் நடித்து வருகிறார். இதில் கல்யாணி கதாநாயகியாக வருகிறார். அர்ஜுன், இவானா ஆகியோரும் நடித்துவருகின்றார். சூப்பர் ஹீரோ கதையாக தயாராகி வருகிறது. இந்த படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்குகிறார். டிசம்பர் மாதம் இறுதியில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

ஐதராபாத்தில் ஹீரோ படப்பிடிப்பில் இருந்த சிவகார்த்திகேயனை பிரபல நடிகர் நாகார்ஜுனா-நடிகை அமலா தம்பதியின் மகனும் நடிகருமான அகில் தனது வீட்டுக்கு அழைத்தார்.அதை ஏற்று அங்கு சென்ற சிவகார்த்திகேயனுக்கு அகில் விருந்து கொடுத்தார். பின்னர் இருவரும் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா குறித்து நீண்ட நேரம் பேசினார்கள். சிவகார்த்திகேயனை சந்தித்த புகைப்படத்தை அகில் இணையதளத்திலும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ஹீரோ பட குழுவினருக்கு வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.

சமீபகாலமாக சிவகார்த்திகேயன் படங்களும் ஆந்திரா, தெலுங்கானாவில் திரையிடப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்த கனா படம் வசூல் குவித்தது. இந்த படத்தை தெலுங்கிலும் கவுசல்யா கிரிஷ்ணமூர்த்தி என்ற பெயரில் ரீமேக் செய்து வெளியிட்டனர். இதில் கவரவ தோற்றத்தில் சிவகார்த்திகேயன் நடித்து இருந்தார்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்