Categories: சினிமா

சிவகார்த்திகேயன் மகனின் 2வது பிறந்தநாள்.! அழகிய புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்திய சிவா.!

வெளியிட்டது

சிவகார்த்திகேயன் தற்போது தனது மகனின் பிறந்தநாளை முன்னிட்டு சில அழகிய புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது. நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கி தற்போது தென்னிந்தியாவின் முக்கிய நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சிவகார்த்திகேயன் மகனின் 2வது பிறந்தநாள்.! அழகிய புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்திய சிவா.! 1

விஜய் தொலைக்காட்சியில் தனது பயணத்தை ஆரம்பித்த அவர், டாக்டர், டான் போன்ற 100 கோடி வசூல் கொடுத்த படங்களில் நடித்திருக்கிறார். 2012 ஆம் ஆண்டு மெரினா என்கிற படத்தின் மூலமாக திரைத்துறையில் நுழைந்த அவர் சுமார் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். தற்போது மடோன் அஸ்வின் இயக்கி வரும் மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இயக்குனர் மிஷ்கின், சரிதா, குக் வித் கோமாளி பிரபலம் மோனிஷா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

 

இந்த படம் வருகிற ஜூலை 14ஆம் தேதி தமிழகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட இருக்கிறது. மாவீரன் படம் தமிழ், தெலுங்கு என்று இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது. தெலுங்கில் மகாவீரடு என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இதில் சிவகார்த்திகேயன் பத்திரிக்கை துறையில் வேலை பார்க்கும் ஒரு கார்ட்டூனிஸ்டாக நடித்திருக்கிறார். அரசியல்வாதிகளை எதிர்த்து கேள்வி கேட்கும் காமெடி கலந்த ஒரு வித்தியாசமான கதையம்சத்தில் அவர் நடித்திருக்கிறார். இந்த படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

 

இதற்கிடையில் தனது மகன் குகன் தாஸின் இரண்டாவது பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார். அது தொடர்பாக அவர் குடும்பத்துடன் இருக்கும் சில அழகிய புகைப்படங்களை பகிர்ந்து, “பிறந்தநாள் வாழ்த்துக்கள்டா தம்பி” என்று பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படங்களில் சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி அவரது மகள் ஆராதனா ஆகியோர் இருக்கின்றனர். இந்த புகைப்படங்களை பார்த்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் என பலரும் குகன் தாஸின் இரண்டாவது பிறந்தநாளுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி ஆர்த்திக்கு ஏற்கனவே ஆராதனா என்கின்ற மூத்த மகள் இருக்கிறார். இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு குகன் பிறந்த பொழுது தன்னுடைய தந்தை தனக்கு மீண்டும் பிறந்திருப்பதாக சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து இருந்தார். மேலும் தனது தந்தையின் பெயரை இணைத்து குகன் தாஸ் என்று அவருக்கு பெயரும் வைத்திருந்தார். தனது மகனின் புகைப்படங்களை பெரிய அளவில் வெளியில் காட்டாத சிவகார்த்திகேயன் தற்போது பிறந்த நாளை முன்னிட்டு புகைப்படங்களை பகிர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்