தனக்கு வைத்த இனிப்பை எடுத்து தமிழுக்கும் சரஸ்வதிக்கும் வைத்த கோதை.! அழகான ப்ரோமோ.!

தமிழும் சரஸ்வதியும் தொடரின் இன்றைய எபிசோடில் நெகிழ்ச்சியான சம்பவங்கள் பல நடந்திருக்கிறது. அதை விஜய் தொலைக்காட்சி தற்போது ஒரு ப்ரோமோ போல வெளியிட்டு இருக்கின்றனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் தொடர் தற்போது பல விறுவிறுப்பான கட்டங்களை எட்டி இருக்கிறது. இத்தனை நாட்களாக பிரிந்து இருந்த கோதையும் அவரது மூத்த மகன் தமிழும் மீண்டும் இணைவார்களா அவர்களது மனங்கள் மாறுமா என்பது குறித்த அடுத்தடுத்து கதை நகர்ந்து வருகிறது. கோதையின் மூத்த மகனாக இருக்கும் தமிழ், கோதையின் மருமகன் அர்ஜுனால் பழிவாங்கப்பட்டு, கோதை கையாலையே வீட்டிலிருந்து அடித்து துரத்த வைக்கப்படுகிறார். வீட்டில் இருந்து வெளியேறும் தமிழ் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார். தன்னுடைய நண்பரின் உதவியில் ஒரு சிறிய வீட்டில் வசித்து வருகிறார். ஏசியில் படுத்து உறங்கிய தமிழுக்கு அந்த வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தனக்கு வைத்த இனிப்பை எடுத்து தமிழுக்கும் சரஸ்வதிக்கும் வைத்த கோதை.! அழகான ப்ரோமோ.! 1

விளம்பரம்

இந்த நிலையில் கோதை இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் தமிழுக்கு பெரிய அளவில் ஆதரவு இருந்து வருகிறது. அந்த நிறுவனத்தின் சேர்மன் பதவிக்காக கோதை மற்றும் தமிழ் இருவரும் போட்டி போடுகின்றனர். அந்தத் தேர்தலில் அதிகபட்ச வாக்குகளை வாங்கி தமிழ் வெற்றி பெறுகிறார். அவரது தாய் கோதை தோல்வியை சந்திக்கிறார். இதனால் மீண்டும் கோதையில் நிறுவனத்தின் அதிகாரங்கள் தமிழுக்கு கிடைக்கிறது. இந்த நிலையில் கோதையின் இரண்டாவது மகனாக இருக்கும் கார்த்தியின் குழந்தைக்கு பெயர் வைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. சந்திரகலா வீட்டில் அதற்கு மிகப் பெரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. அங்கு தமிழ் மற்றும் சரஸ்வதிக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது. குடும்பத்தில் உள்ள அனைவரும் எப்படியாவது தாயையும் மகனையும் சேர்த்து வைக்க வேண்டும் என்று படாதபாடு படுகின்றனர். அதற்காக உணவு அருந்தும் போது தமிழுக்கு அருகில் அவரது தாய் கோதையை அமர வைக்கின்றனர்.

தொடர்புடையவை  ராஜி பற்றிய உண்மைகளை கோமதியிடம் கூறிய பாக்யா.! த ற் கொ லை முடிவை எடுத்த ராஜி.! Promo உள்ளே

தனக்கு வைத்த இனிப்பை எடுத்து தமிழுக்கும் சரஸ்வதிக்கும் வைத்த கோதை.! அழகான ப்ரோமோ.! 3

விளம்பரம்

தமிழ் பக்கத்தில் அமரும்போது முதலில் வேண்டா வெறுப்பாக எழுந்து செல்ல முயற்சிக்கிறார் கோதை. ஆனால் அவரை சமாதானப்படுத்தி அங்கேயே சந்திரகலா அமர வைக்கிறார். கோதை தனக்கு வைத்து இனிப்பை எடுத்து தமிழுக்கும் சரஸ்வதிக்கும் வைக்கிறார். அந்த அழகான வீடியோவை தற்போது ப்ரோமோவாக வெளியிட்டுள்ளது விஜய் டிவி. அந்த வீடியோவிற்கு லைக்குகளும் குவிந்து வருகிறது. விரைவில் இருவரும் இணைய வேண்டும் என்பதே பலரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. தற்போது வெளியாகியிருக்கும் அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..! 

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment