பிரசவ வலியால் துடித்த ஐஸ்வர்யாவுக்கு பிறந்த குழந்தை.! பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ.!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் கண்ணனின் மனைவி ஐஸ்வர்யாவிற்கு வீட்டில் நடக்கும் பிரச்சினைகள் காரணமாக திடீரென பிரசவ வலி ஏற்படுகிறது. வலியால் துடிக்கும் ஐஸ்வர்யாவை பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் நாளுக்கு நாள் விறுவிறுப்பான கட்டங்களை எட்டி வருகிறது. தற்போது கதைப்படி வங்கியில் வேலை பார்த்து வரும் கண்ணனுக்கு எதிராக மேல் அதிகாரியே சதி செய்கிறார். அவர் கண்ணன் லஞ்சம் வாங்கியதாக பொய் புகார் கூற வைத்து அவரை கைது செய்து சிறையில் அடைக்கும்படி செய்து விட்டார். இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் தற்போது நிம்மதி இல்லாமல் இருந்து வருகிறது. இது மேலும் பிரச்சனையை பெரிதாக கிளப்பி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பிரசவ வலியால் துடித்த ஐஸ்வர்யாவுக்கு பிறந்த குழந்தை.! பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ.! 1

விளம்பரம்

அனைத்து பிரச்சினைகளும் முடிந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் நிலையில், தற்போது மீண்டும் புதிய பிரச்சனை கிளம்பி இருக்கிறது. கண்ணன் மேசையில் இருந்து தான் பணம் எடுக்கப்பட்டது என்று சொல்லி கதிர் வந்து வீட்டில் உள்ள அனைவரிடமும் கூற, மூர்த்தி தனத்திடம் கோபப்பட்டு கத்திக் கொண்டிருக்கிறார். அப்போது பிரச்சனையின் காரணமாக அழுது கொண்டிருக்கும் ஐஸ்வர்யாவிற்கு பிரசவ வலி ஏற்படுகிறது. இதனால் வீட்டில் உள்ள அனைவரும் துடிதுடிக்க போகின்றனர். ஐஸ்வர்யாவை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறக்கிறது. குழந்தையை பார்க்க வரும் மூர்த்தியிடம், தான் செய்த அனைத்தும் தவறு தான், என்னை மன்னித்து விடுங்கள் மாமா என்று ஐஸ்வர்யா கண்ணீர் மல்க கேட்கிறார்.

தொடர்புடையவை  கெளதம் நிச்சயதார்த்தம் நடக்கும் இடத்திற்கு ஐஸ்வர்யாவை அழைத்து வந்த மஹா.! பீதியில் கெளதம்.!

பிரசவ வலியால் துடித்த ஐஸ்வர்யாவுக்கு பிறந்த குழந்தை.! பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ.! 3

விளம்பரம்

தவறை உணர்ந்து கொண்ட ஐஸ்வர்யாவின் மீது மூர்த்திக்கு பரிதாபம் வருகிறது. அப்போது அவர் கண்ணன் செய்த தவறுக்கு நீயும் குழந்தையும் என்ன செய்வீர்கள். உங்கள் இருவரையும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டியது என்னுடைய கடமை என்று சொல்கிறார். இதை கேட்டு ஐஸ்வர்யா கண்ணீர் விட்டு கதறி அழுகிறார். அந்த நிகழ்ச்சியான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment