சின்னத்திரையில் இப்பொது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான நிகழ்ச்சி என்றால் விஜய் டிவியின் “குக் வித் கோமாளி” நிகழ்ச்சி தான். சமையல் போட்டியான இதில் போட்டியாளர்களுடன் சேர்ந்து கொண்டு கோமாளிகளாக வருகிறவர்கள் செய்யும் அலப்பறை தான் ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஷயமாகும். இதில் கோமாளிகளாக வரும் பாலா,புகழ், மணிமேகலை போன்றோர் தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் கொண்டுள்ளனர். அதில் குறிப்பிடத்தக்கவர் சிவாங்கி.

சூப்பர் சிங்கரில் பாடகியாக அறிமுகமாகி அந்த போட்டியின் அரையிறுதி சுற்று வரை சென்று தோல்வியுற்று வெளியேறினார் பாடகி சிவாங்கி. இவரை பாடகியாக மக்கள் அறிந்ததை விட கூக் வித் கோமாளியில் கோமாளியாக இவரை ரசித்தவர்கள் அதிகம். பெருமபாலும் காமெடி ஒன்றையே முக்கியமாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில் நிறைய பேர் மக்களிடம் நல்ல பெயரை பெற்றுள்ளனர். அதில் மிக முக்கியமானவர் சிவாங்கி.
சிவாங்கி அண்மையில் அண்மையில் வெளியான நடிகர் சிவகார்த்திகேயனின் “டான்” படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமையுள்ளார். காமெடி கதாபாத்திரத்தில் தோன்றிய இவர் பேசிய “க்ரஷ்” குறித்த வசனம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. வெளியான இரண்டு வாரங்களில் இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது.
இப்பொது விஜய் டிவியின் மிக முக்கிய அங்கமாக மாறியுள்ள இவர், பல்வேறு போட்டிகளிலும், நிகழ்ச்சிகளிலும், சில படங்களிலும் நடித்து வருகிறார். நடுவில் தன்னுடைய படிப்பையும் கரெக்ட்டாக தொடர்ந்து வருகிறார். சில நாட்கள் முன்பு கூட இவர் தொடர்ந்து வேலை செய்து வருவதால், உடல் நிலை கொஞ்சம் மோசமாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இப்பொது உடல்நலம் சீராக மீண்டும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கி வருகிறார். இதன் நடுவில் அவ்வப்போது கிடைக்கும் படங்களிலும் நடிக்க முயற்சி எடுத்து வருகிறார். எப்போதும் சம்கவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் சிவாங்கி இன்ஸ்டாகிராம், ட்விட்டர் மூலம் ரசிகர்களிடம் எப்போதும் உரையாடிக்கொண்டே இருக்கிறார்.
இந்த ஒரு பங்காக சாமேப்த்தில் இவர் இன்ஸ்டாகிராம் ரசிகர்களிடம் உரையாடல் நடத்தினார். அப்போது ரசிகர் ஒருவர் “நீங்கள் உங்களை பற்றி தவறான கருத்துக்களை பரப்புபவர்கள் பற்றி உங்களுடைய கருத்துக்கள் என்ன” என கேட்டார். அதற்கு சிவாங்கி, “நம்மளால அவுங்களே எதுவும் பண்ண முடியாது, எல்லா வகையிலான கருத்துக்களும் வரத்தான் செய்யும், அப்படியே சிரிச்சி விட்ருவோம்..வேற என பண்ண முடியும்” என பதிலளித்துள்ளார். மேலும் பல்வேறு வகையிலான கேள்விகளுக்கும் அவர் பதில் கொடுத்துள்ளார். அதில் முக்கியமானது அவர் விரைவில் ஒரு ஆல்பம் பாடல் வெளியிடப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.