“பிரபல சீரியலில் நாயகியாக களமிறங்கும் பிக் பாஸ் ஜூலி”!! ப்ரோமோவை வெளியிட்டு பரபரப்பை கிளம்பியுள்ள ஜீ தமிழ்!!

தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் மிகவும் பிரபலமானார் ஜூலி. செவிலியரான இவர்க்கு இந்த போராட்டத்தில் பங்கெடுத்ததன் மூலம் மிக பெரிய அளவில் மக்கள் மத்தியில் நல்ல அபிப்ராயம் உண்டானது. இதன் மூலம் ஒரே நாளில் செலிபிரிட்டி அளவிற்கு வளர்ந்தார் ஜூலி. அந்த போராட்டம் மூலம் கிடைத்த அறிமுகம் இவரை விஜய் டிவி முதன் முதலில் நடிகர் கமல் தொகுத்து வழங்கிய “பிக் பாஸ்” நிகழ்ச்சியில் பங்கெடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.   

"பிரபல சீரியலில் நாயகியாக களமிறங்கும் பிக் பாஸ் ஜூலி"!! ப்ரோமோவை வெளியிட்டு பரபரப்பை கிளம்பியுள்ள ஜீ தமிழ்!! 1

விளம்பரம்

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவருக்கு இவர் செய்த செயல்கள் மூலமாக வெளியில் கிடைத்த நல்ல பெயர் முற்றிலும் மாறியது. பலரும் இவரை மீம்ஸ் போட்டு கிழித்தெடுக்க ஆரம்பித்தனர். ட்ரோல் மேட்டரியலாகவே மாறிப்போனார் ஜூலி. பெரும் நெகட்டிவ் விமர்சனங்கள் பிறகு அந்த நிகழ்ச்சியின் 7வது வாரத்தில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார்.

"பிரபல சீரியலில் நாயகியாக களமிறங்கும் பிக் பாஸ் ஜூலி"!! ப்ரோமோவை வெளியிட்டு பரபரப்பை கிளம்பியுள்ள ஜீ தமிழ்!! 3

விளம்பரம்

வெளியில் வந்த பிறகு இவருக்கு தொடர்ந்து நெகட்டிவ் விமர்சங்களே கிடைத்தது. கலைஞர் தொலைக்காட்சியில் ஒரு தொகுப்பாளராக அறிமுகமான இவர் பின் 2018ஆம் வெளியான விமலின் “மன்னர் வகையறா” படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். மேலும் அம்மன் தாயே மற்றும் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்த “நான் சிரித்தால்” போன்ற படங்களில் சிறு சிறு பாத்திரங்களில் நடித்துள்ளார். எங்கு சென்றாலும் நெகட்டிவ் விமர்சனமே கிடைத்ததால் சிறுது காலம் மீடியா பார்வையில் இருந்து ஒதுங்கி கிடந்த இவர் தன்னுடைய சமூகவலைத்தளங்களில் மட்டும் மிகவும் ஆக்ட்டிவாக செயல்பட்டு வந்தார்.

தொடர்புடையவை  ஏன்டா இப்படி ஒரு படம் எடுத்து எங்க உயிரை வாங்குறீங்க?? பதான் படத்தை வெளுத்து வாங்கிய ப்ளூ சட்டை.!

"பிரபல சீரியலில் நாயகியாக களமிறங்கும் பிக் பாஸ் ஜூலி"!! ப்ரோமோவை வெளியிட்டு பரபரப்பை கிளம்பியுள்ள ஜீ தமிழ்!! 5

விளம்பரம்

போட்டோஷூட் நடத்தி புகைப்படங்கள் வெளியிடுவது, அவ்வப்போது ரசிகர்ளுடன் உரையாடுவது என எதிர்மறையான விமர்சனம் பெற்றபோதிலும் செலிபிரிட்டி அந்தஸ்தை விரைவில் அடைந்தார். அண்மையில் முடிந்த “பிக் பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சியிலும் பங்கெடுத்து தோல்வியடைந்து வெளியேறினார். இந்நிலையில் இவர் இப்பொது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாக உள்ளார்.

"பிரபல சீரியலில் நாயகியாக களமிறங்கும் பிக் பாஸ் ஜூலி"!! ப்ரோமோவை வெளியிட்டு பரபரப்பை கிளம்பியுள்ள ஜீ தமிழ்!! 7

விளம்பரம்

தந்தை, தாய் பாசத்தை அடிப்படையாக கொண்டு சில மாதங்களாக ஜீ தமிழில் ஒளிபரப்பப்படும் தொடர் “தவமாய் தவமிருந்து” தொடர். இந்த தொடரில் திருமண பெண்ணாக சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார் ஜூலி. அந்த ப்ரோமோவை ஜீ தமிழ் தொலைக்காட்சி அதிகாரப்பூர்வாமாக வெளியிட்டுள்ளது. அந்த விடியோவை நீங்களும் காண…

விளம்பரம்

Video Courtesy – ZeeTamil

விளம்பரம்

Leave a Comment