மாஸாக வர ஆசைப்பட்டு தமாஷாகி போன சிவாங்கி”!! அனைவரது முன்னிலும் சிவாங்கியை சம்பவம் செய்த டிரஸ்!!

வெளியிட்டது

சூப்பர் சிங்கரில் பாடகியாக அறிமுகமாகி அந்த போட்டியின் அரையிறுதி சுற்று வரை சென்று தோல்வியுற்று வெளியேறினார் பாடகி சிவாங்கி. இவரை பாடகியாக மக்கள் அறிந்ததை விட கூக் வித் கோமாளியில் கோமாளியாக இவரை ரசித்தவர்கள் அதிகம். பெருமபாலும் காமெடி ஒன்றையே முக்கியமாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில் நிறைய பேர் மக்களிடம் நல்ல பெயரை பெற்றுள்ளனர். அதில் மிக முக்கியமானவர் சிவாங்கி.

மாஸாக வர ஆசைப்பட்டு தமாஷாகி போன சிவாங்கி"!! அனைவரது முன்னிலும் சிவாங்கியை சம்பவம் செய்த டிரஸ்!! 1

சிவாங்கி அண்மையில் அண்மையில் வெளியான நடிகர் சிவகார்த்திகேயனின் “டான்” படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமையுள்ளார். காமெடி கதாபாத்திரத்தில் தோன்றிய இவர் பேசிய “க்ரஷ்” குறித்த வசனம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. வெளியான இரண்டு வாரங்களில் இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது.

இப்பொது விஜய் டிவியின் மிக முக்கிய அங்கமாக மாறியுள்ள இவர், பல்வேறு போட்டிகளிலும், நிகழ்ச்சிகளிலும், சில படங்களிலும் நடித்து வருகிறார். நடுவில் தன்னுடைய படிப்பையும் கரெக்ட்டாக தொடர்ந்து வருகிறார். சில நாட்கள் முன்பு கூட இவர் தொடர்ந்து வேலை செய்து வருவதால், உடல் நிலை கொஞ்சம் மோசமாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இப்பொது மக்கள் மத்தியில் செலிபிரிட்டி அந்தஸதை பெற்றுள்ள இவர் சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றிற்கு கலந்துகொண்டார். எப்போதும் விழாக்களுக்கும், நிகழ்ச்சிகளிலும் அழகான உடைகள் அணிந்து வருவது சகஜமே. அந்த வகையில் ஆசைப்பட்ட சிவாங்கி சமீபத்தில் ஒரு விருது விழாவுக்கு ஹீரோயின்கள் போல நீளமான உடை அணிந்து வந்திருந்தார்.

ஆனால் அந்த உடை அனைத்து கொண்டு அவரால் அங்கிருந்த படிக்கட்டுகளில் எளிதாக ஏறிவிட முடியவில்லை. இதனால் அவருக்கு உதவிட 3 பேர் சேர்ந்து அவரது துணியை பிடித்துக்கொண்டு அவரை அங்கிருந்த படிக்கட்டுகளில் ஏற உதவிட்டனர். இதனை தன்னுடைய போனில் நண்பர் உதவியுடன் படம் பிடித்த சிவாங்கி, அந்த விடியோவை பகிர்ந்து Dress sambavam என கேப்ஷன் இட்டுள்ளார். இந்த வீடியோ இப்பொது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Video Courtesy – Sivangi KrishnaKumar

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்