Categories: சினிமா

“ஓவியம் வரையும் கனிகா”!! பின்னாலிருந்து மறைந்திருந்து பார்க்கும் சினேகன்!!

வெளியிட்டது

கவிஞர், நடிகர் சினேகன் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் திரையுலக ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயம். பிரபல பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்துவுடன் தன்னுடைய திரை வாழ்க்கையை துவங்கிய இவர், 2000 ஆம் ஆண்டு முதல் தன்னிச்சையாக செயல் பட துவங்கினார். இதுவரையில் 2500 பாடல்கள் மேல் எழுதியுள்ள இவர், 750 பாடங்களில் மொத்தமாக பணிபுரிந்துள்ளார்.

"ஓவியம் வரையும் கனிகா"!! பின்னாலிருந்து மறைந்திருந்து பார்க்கும் சினேகன்!! 1

பகவதி, கோவில், ஆட்டோகிராப், சார்லி சாப்ளின், மௌனம் பேசியதே, ஏப்ரல் மாதத்தில், சாமி, மன்மதன், பேரழகன், பருத்திவீரன், ராம், ஏகன், ஆடுகளம், சூரரை போற்று என முன்னணி நடிகர்களின் மிக பெரிய வெற்றி படங்களிலும் இவர் பணியாற்றியுள்ளார். பாடலாசிரியர் மட்டுமின்றி ஒரு எழுத்தாளராகவும் ஸ்நேகன் முக்கியம் பெற்றவர். இப்படியும் வாழலாம், புத்தகம் போன்ற நூல்களையும் எழுதியுள்ளார்.

நடிகர் கமல் தொகுத்து வழங்கிய “பிக் பாஸ்” சீசன் 1 நிகழ்ச்சியின் மிக முக்கிய போட்டியாளராக பார்க்கப்பட்ட இவர் அதில் கலந்து கொண்டு மக்களிடம் நல்ல அறிமுகத்தையும், பெயரையும் பெற்றார். இயக்குனர் அமீரின் “யோகி”, உயர்திரு 420 போன்ற சில படங்களில் நடித்தும் உள்ளார். நடிகர் கமலின் மக்கள் நீதி மையம் சார்பில் கடந்த 2021ஆம் ஆண்டு சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டார்.

s

கவிஞர் சினேகன் நடிகை கனிகா ரவி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவருமே இன்ஸ்டாகிராம் போன்ற தலத்தில் எப்போதுமே சுறுசுறுப்பாக இருப்பவர்கள். இருவருக்கும் நிறைய ரசிகர்களும் இருக்கிறார்கள். அவ்வப்போது புகைப்படங்கள் வெளியிடுவதும், விடியோக்கள் தங்களுடைய பக்கத்தில் பதிவிடுவதையும் இருவருமே வழக்கமாக கொண்டுள்ளனர்.

இப்பொது அண்மையில் சினேகன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கனிகா தன்னுடைய ஓவிய கலையை காண்பிக்கும் படி பையிண்டிங் செய்த்துக்கொண்டிருக்கிறார். அந்த விடியோவை சினேகன் பின்னாலிருந்து பார்ப்பது போல வீடியோ எடுத்து தன்னுடைய பதிவில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. அந்த விடியோவை நீங்களும் காண…..

Video Courtesy – Sneham Talks

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்