இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்திருக்கும் ஒரு செய்தி என்றால் அது சினேகா பிரசன்னா தம்பதிகளின் இளைய மகள் ஆதிந்த்யாவின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் தான். இரண்டு நாட்களாக மகளின் பிறந்த நாள் புகைப்படங்களை வெளியிட்டு வரும் சினேகா, தற்போது மீண்டும் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டள்ளது.

அவரின் பிறந்தநாளுக்கு நடந்த நைட் பார்ட்டியில் பல திரைப்பட பிரபலங்கள் வந்து குவிந்து இருக்கின்றனர். அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி இருக்கிறது. தங்களது வீட்டில் நடக்கும் ஒவ்வொரு பண்டிகைகள் மற்றும் விசேஷங்களின் புகைப்படங்களை தங்களது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் நடிகை சினேகா. கடந்த ஒரு வருடமாக புத்தாண்டு கொண்டாடுவது, வரலட்சுமி பூஜை, கொலு, நவராத்திரி, தீபாவளி, பொங்கல், பிறந்தநாள் பார்ட்டிகள் என்று ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்கிறார்.
மேலும் சில மாதங்களுக்கு முன்பு தனது தந்தைக்கு 60-வது திருமணத்தை குடும்பத்துடன் சேர்ந்து நடத்தி வைத்திருந்தார் சினேகா. அந்த புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகியிருந்தது. மேலும் தந்தை பெயரில் ஆதரவற்ற குழந்தைகளின் இல்லத்திற்கு சென்று அங்கு அவர் உணவளித்தும், புது உடைகள் வழங்கியும், தந்தையின் அறுபதாவது திருமண நாளை வெகு விமர்சையாக கொண்டாடியிருந்தார். இது போல் தொடர்ந்து பல நல்ல விஷயங்களை செய்து வரும் சினேகா இரண்டு நாட்களுக்கு முன்பு தனது மகள் ஆதிந்த்யாவின் பிறந்தநாளை கொண்டாடி இருந்தார்.
மகள், மகன், கணவர் பிரசன்னா ஆகிய அனைவரையும் அழைத்துக் கொண்டு ஆசிரமத்திற்கு சென்று அவர் அங்கு குழந்தைகளுடன் தனது மகள் மற்றும் மகனை ஆடவிட்டும், அவர்களுக்கு கேக் வெட்டியும், உணவுகள் அளித்தும், புது உடைகள் வழங்கியும் மிகச் சிறப்பாக கொண்டாடி இருந்தார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக வைரலாகத தொடங்கியது. சினேகாவின் நல்ல உயர்ந்த உள்ளத்தை பலரும் பாராட்டி அவரை வாழ்த்தி வந்தனர்.
இந்த நிலையில் இன்று தனக்கு நெருக்கமான தோழிகள் மற்றும் சினிமா பிரபலங்களை அழைத்து பிரம்மாண்ட பார்ட்டி ஒன்றை வைத்து மகளின் பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன. லைக்குகளையும் குவித்து வருகிறது. விஜயகுமாரின் மகள்களான அனிதா, பிரீத்தா, நடிகர் அசோக் உள்ளிட்ட பலர் அந்த பார்ட்டியில் கலந்து கொண்டு இருக்கின்றனர்.
சினேகா தன்னுடைய மகளுக்கு மேட்சிங் ஆக பர்பிள் நிற உடை அணிந்து கொண்டிருக்கிறார். மேலும் அவரது மகனும் பிரசன்னாவும் ஒரே நிற உடையை அணிந்து கொண்டிருக்கின்றனர். பார்ப்பதற்கே மிக அழகாக இருக்கும் அந்த புகைப்படங்கள் தற்போது லைக்குகளை குறித்து வருகிறது. ரசிகர்கள் சினேகாவின் மகள் ஆதிந்த்யாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர். Watch the Video Below..!
Youtube Video Code Embed Credits: Viral Videos 3.O