பார்த்தியிடம் இருந்து விவாகரத்து வாங்கிய காவ்யா.! முடிவுக்கு வந்தது ஈரமான ரோஜாவே 2 சீரியல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஈரமான ரோஜாவே பாகம் 2 தற்போது முடிவடைய இருக்கிறது. அதற்கான கடைசி ப்ரோமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. ஈரமான ரோஜாவே சீசன் 1 விஜய் டிவியில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகியது. இந்த தொடர் சிறப்பான வரவேற்பு பெற்றதையடுத்து தற்போது சீசன் 2வை ஒளிபரப்ப விஜய் டிவி திட்டமிட்டு இருந்த்து. இந்த தொடரை சமீபத்தில் காலமான இயக்குனர் தாய் செல்வம் இயக்கி வந்தார். விஜய் டிவியின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சீரியல்கள் என அனைத்தும் மக்களை கவரும் விதமாக இருக்கிறது. வித்தியாசமான நிகழ்ச்சிகளுக்கு பெயர் போன விஜய் டிவி பிக்பாஸ், சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி போன்ற மக்கள் மனதை வென்ற பல தொடர்களை ஒளிபரப்பி வருகிறதுழ இந்த நிலையில் இந்த ரியாலிட்டி ஷோக்களுக்கு இணையாக பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி, மௌன ராகம் போன்ற பல தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடர்களுக்கும் கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பார்த்தியிடம் இருந்து விவாகரத்து வாங்கிய காவ்யா.! முடிவுக்கு வந்தது ஈரமான ரோஜாவே 2 சீரியல் 1

விளம்பரம்

அதில் மக்களின் மனம் கவர்ந்த தொடர்களில் ஒன்றாக இருப்பது ஈரமான ரோஜாவே சீசன் 2. இந்த கதை குறித்து பார்த்தோமானால் பார்த்திபன் – ஜீவா என்கிற அண்ணன் தம்பிகள் இருக்கிறார்கள். இதில் பார்த்திபனுக்கு பிரியா என்கிற பெண்ணை மணம் முடிக்க திட்டமிட்டு வருகின்றனர். ஆனால் கடைசி நேரத்தில் பிரியா கடத்தப்பட்டு விடுகிறார். அப்போது பிரியாவின் தங்கை காவ்யாவை பார்த்திபனுக்கு மணம் முடித்து வைக்கின்றனர். ஆனால் அங்கு ஒரு திருப்பம் என்னவென்றால், பிரியாவின் தங்கை காவியாவும் பார்த்திபனின் தம்பி ஜீவாவும் காதலித்து வந்தனர்ழ எனவே தம்பியின் காதலி என்று தெரியாமலேயே அவரை திருமணம் செய்து கொள்கிறார் அண்ணன் பார்த்திபன். இவர்கள் திருமணம் ஆன நாள் தொடங்கி ஒன்றாக வாழவில்லை. இவர்கள் இருவருக்குள்ளும் ஏதோ மனக்கசப்பு இருந்து கொண்டே இருக்கிறது. பார்த்திபனிடமிருந்து காவியா விவாகரத்து வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருக்கிறார்.

தொடர்புடையவை  பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து விலகிய முக்கிய பிரபலம்.! இன்ஸ்டாகிராமில் அறிவிப்பு.!

பார்த்தியிடம் இருந்து விவாகரத்து வாங்கிய காவ்யா.! முடிவுக்கு வந்தது ஈரமான ரோஜாவே 2 சீரியல் 3

விளம்பரம்

ஆனால் காவியாவின் மனதை மாற்றி எப்படியாவது தான் அவருடன் சேர்ந்து வாழ்வேன் என்று பார்த்திபன் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிகிறது. தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் காவியா தனக்கு விவாகரத்து வேண்டும் என்று கேட்டு பார்த்திபனிடம் கூறுகிறார். இதனால் அதிர்ச்சியில் உறைந்த பார்த்திபனும் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட்டு கொடுக்கிறார். இந்த ப்ரோமோவை வெளியிட்டு “இறுதிக்கட்டத்தை நோக்கி” என்று விஜய் டிவி ப்ரோமோவை வெளியிட்டுள்ளது. இப்பொழுதுதான் ஆரம்பித்த மாதிரி இருக்கிறது அதற்குள் இந்த சீரியல் முடிய போகிறது என்று ஈரமான ரோஜாவே சீரியலில் ரசிகர்கள் சோகத்தில் இருக்கிறார்கள். இயக்குனர் தாய் செல்வம் மறைந்து விட்டதால் இந்த சீரியல் முடிவடைவதாகவும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். அந்த ப்ரோமோவை நீங்களும் காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்…! Watch the Video Below..!

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment