Categories: சினிமா

வாழ்க்கையின் அர்த்தத்தை கற்று தந்தாய்.! மகளின் பிறந்தநாளில் உருக்கமாக பதிவிட்ட சினேகா.!

வெளியிட்டது

நடிகை சினேகா பிரசன்னா தம்பதிகளின் மகள் ஆதித்யந்தாவுக்கு இன்று பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. அந்த புகைப்படங்களை சினேகா தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து உருக்கமாக பதிவிட்டு இருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சினேகா.

வாழ்க்கையின் அர்த்தத்தை கற்று தந்தாய்.! மகளின் பிறந்தநாளில் உருக்கமாக பதிவிட்ட சினேகா.! 1

இவர் 2002 ஆம் ஆண்டு மலையாள படத்தின் மூலமாக திரையுலத்திற்குள் அடி எடுத்து வைத்தார். பின்னர் அதே ஆண்டு தமிழில் வெளியான “ஆனந்தம்” என்னும் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அந்த படத்தில் “பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்” என்கிற பாடலின் மூலமாக பலரின் மனங்களை கொள்ளையடித்தார். “புன்னகை இளவரசி” என்று அன்போடு அழைக்கப்படும் சினேகா, கமல், அஜித், விஜய், தனுஷ், சிம்பு என பல முன்னணி ஹீரோக்களுடன் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.


திரைத்துறைக்கு வந்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக மாறினார் சினேகா. சினேகாவுக்கும் பிரசன்னாவிற்கும் 2009 ஆம் ஆண்டு “அச்சமுண்டு அச்சமுண்டு” என்கிற படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது காதல் மலர்ந்தது. பின்னர் இதை பொதுவெளியில் கூறாமல் இருந்து வந்த இவர்கள், 2011 ஆம் ஆண்டு வெளிப்படையாக அறிவித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டிருக்கும் சினேகா தற்போது சில படங்களில் மட்டும் கமிட்டாகி நடித்து வருகிறார். கடைசியாக 2020 ஆம் ஆண்டு வெளிவந்த “பட்டாஸ்” என்கிற படத்தில் மட்டும் நடித்திருந்தார் சினேகா.


தற்போது குணச்சித்திர வேடங்களிலும் அவர் நடிக்கத் தொடங்கி இருக்கிறார். மேலும் நடன நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோக்களிலும் நடுவராக பங்கெடுத்து வருகிறார் சினேகா. மக்களின் மன்கவர்ந்த ஜோடிகளாக இருக்கும் சினேகா பிரசன்னா தம்பதிகளுக்கு விஹான் என்கிற ஆண் குழந்தையும் ஆதிந்த்யா என்கிற பெண் குழந்தையும் இருக்கிறார்கள்.

சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் சினேகா பிரசன்னா தம்பதிகள் தொடர்ந்து தங்களது சோஷியல் மீடியா பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டும், வீடியோக்களை வெளியிட்டும் வருகின்றனர். சமீபத்தில் கூட குடும்பத்துடன் துபாய் சென்றிருந்த அவர்கள் அங்கு ஆங்கில புத்தாண்டை கொண்டாடி அந்த புகைப்படங்களை வெளியிட்டு இருந்தனர்.

இந்த நிலையில் சினேகாவின் மகள் ஆதித்யந்தாவுக்கு இன்று பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. அந்த புகைப்படங்களை சினேகா தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து உருக்கமாக பதிவிட்டு இருக்கிறார்.பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் சூரிய ஒளியே. ! நீ என் இதயத்தை அன்பால் நிரப்புகிறாய், நீ என் உலகத்தை நிரப்புகிறாய், நீ என் ஆன்மாவை நிரப்புகிறாய்.

நீ என் மீது பொழியும் அன்பு பிரபஞ்சத்தில் மிக அழகான விஷயம். எப்போதும் அதே குறும்பு, அக்கறை, அன்புடன் இரு. வாழ்க்கையின் அர்த்தத்தை எங்களுக்குக் கற்றுக் கொடுத்தாய்! உன்னை காதலிக்கிறேன் என்று பதிவிட்டு இருக்கிறார்.அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்