கடந்த வாரம் நடந்த விருமன் இசை வெளியீட்டு விழாவில் சூரி பேசியிருந்தது கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு தற்போது விளக்கம் அளித்து மீண்டும் சூரி பேசியுள்ள வீடியோ வைரல் ஆகி வருகிறது. கார்த்திக் மற்றும் அதிதி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் விருமன். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு நடிகர் சூரி சென்றிருந்தார். அங்கு அவர் சூர்யா மற்றும் கார்த்தியின் அகரம் அறக்கட்டளை பற்றி மேற்கோள்காட்டி பேசினார். அதில் ஆயிரம் கோயில்களை கட்டுவதை விட அன்ன சத்திரங்களை கட்டுவதை விட ஒரு பள்ளிக்கூடம் கட்டுவது பல ஜென்மங்களுக்கு பேசும் என்று பேசி இருந்தார். இந்த வீடியோ வெளியான பிறகு பலரும் சூரியை கழுவி ஊற்றினர். சமீபத்தில் சூரி மதுரையில் ஒரு ஹோட்டல் ஒன்றை ஆரம்பித்து இருந்தார். அதை மேற்கோள் கட்டி நீங்கள் ஏன் ஹோட்டல் ஆரம்பித்தீர்கள்? ஒரு பள்ளிக்கூடம் கட்டி இருக்கலாமே என்று நெட்டிசன்கள் சூரியை வறுத்து எடுத்து விட்டனர். குறிப்பாக பயில்வான் ரங்கநாதன் சூரியை பிரித்து எடுத்து விட்டார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

பயில்வான் பேசும் பொழுது, ஏன் குறிப்பிட்டு கோயில்களை மட்டுமே கூறுகிறீர்கள்? சர்ச் மசூதிகளை பற்றி பேசுவதில்லை. படிப்பு ஒன்று தான் வாழ்க்கை தருமா,ழ காமராஜர் கலைஞர் எல்லாம் படித்துதான் முதலமைச்சர் ஆனார்கள்? நீங்கள் சாலிகிராமத்தில் உணவுக்கே கஷ்டப்பட்டு கொண்டிருந்தீர்கள், நீங்கள் படித்துவிட்டுத்தான் தற்போது கோடி கோடியாக சம்பாதிக்கிறீர்களா? நாவை அடக்கி பேச வேண்டும் என்று சூரிக்கு கடுமையான எச்சரிக்கையை பயில்வான் ரங்கநாதன் விடுத்திருந்தார். இதற்கு பலரும் ஆதரவாக கருத்து தெரிவித்தனர். ஏற்கனவே ஜோதிகா இது போல, நீங்கள் கோவில்களுக்கு கொண்டு உண்டியலில் பணத்தை போடுவதை விட அரசு மருத்துவமனைகளுக்கு மேம்பாட்டிற்கு நிதி உதவி கொடுங்கள் என்று பேசி அது மிகப்பெரிய சர்ச்சையானது. ஜோதிகாவும் அந்த மருத்துவமனை மேம்பாட்டிற்காக பணத்தையும் வழங்கி இருந்தார்.
இந்த நிலையில் இன்று மீண்டும் சென்னையில் விருமன் பட பிரஸ்மீட் ஒன்று நடந்தது. அதில் பேசிய சூரி தான் பாரதியார் கூறியதை தான் மேற்கோள் காட்டிக் கூறினேன். படிப்பு முக்கியமானது, நான் கோவில்கள் கட்டுவதற்கு எதிரானவன் இல்லை, தன்னுடைய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. படிக்காதவர் என்பதற்காக என்னுடைய கருத்தை தவறாக புரிந்து கொள்கிறார்கள் என்று அவர் வருத்தம் தெரிவித்தார். மேலும் எனக்கும் கடவுள் நம்பிக்கை உண்டு என்றும், நான் எப்பொழுதும் மீனாட்சி அம்மன் என்று தான் சொல்வேன், என்னுடைய கடைகளை கூட அம்மன் பெயரிலேயே தான் நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். அன்றைக்கு கல்வியை ஒரு சிறப்பான விஷயம் என்று சொல்வதற்காக தான் அப்படி சொன்னேன், மகாகவி பாரதியார் கூட கல்வியின் உள்நோக்கத்தை பற்றி கூறியிருக்கிறார், என்றும் அதைத்தான் தானும் சொன்னேன் என்றும், தவறாக நினைக்காதீர்கள் நானும் சாமி கும்பிடுவேன் தான் இன்றைக்கும் சொல்கிறேன் அனைவருக்கும் கல்வி வேண்டும் என்று பதிலடி சூரி கொடுத்துள்ளார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video…
Youtube Video Code Embed Credits: Shruthi TV