விடுதலை 2 படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு..! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் விடுதலை. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து உள்ளார். நடிகர் விஜய் சேதுபதி முக்கியாகதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இப்படம் மாபெரும் வெற்றியினை ரசிகர்களிடம் பெற்று இருந்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்து இருந்தது.

விடுதலை 2 படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு..! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..! 1

விளம்பரம்

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வந்தது. தற்போது படப்பிடிப்பு முடிந்து உள்ளது. எப்பொழுது இப்படம் வெளியாகும் என ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருந்தனர். ஏற்கனவே நடிகர் சூரி இந்த ஆண்டு விடுதலை 2 வெளியாகும் என பேட்டிகளில் கூறி இருந்தார். அதன்படி தற்போது இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வெளியாக உள்ளதாக படகுழு அறிவித்துள்ளது.

விடுதலை 2 படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு..! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..! 3

விளம்பரம்

இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி வருகிற 17ஆம் தேதி விடுதலை 2 படத்தில் இடம்பெற்றுள்ள, தினம் தினமும் பாடலை வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது.

தொடர்புடையவை  Keerthy Suresh நடிக்கும் ரகு தாத்தா படத்தில் இருந்து "ஏக் காவ் மே" பாடல் வெளியாகியது..!

 

விளம்பரம்

 

View this post on Instagram

 

A post shared by RS Infotainment (@rsinfotainment)

விளம்பரம்

Leave a Comment