பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அணிந்திருந்த அணிகலன்கள் அனைத்துமே தங்க நகைகள் என தற்போது ஒரு வீடியோ வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்தில் இளவரசிகளாக வரும், குந்தவை நாச்சியாராக நடிக்கும் திரிஷாவும் மற்றும் நந்தினியாக நடிக்கும் ஐஸ்வர்யா ராயும் தங்க நகைகளை அணிந்திருப்பர். ட்ரெய்லரில் இவர்கள் இருவரும் முழுதும் தங்க நகையால் அலங்கரித்திருப்பர். இந்த நகைகள் அனைத்தும் கவரிங் நகைகள் என நினைத்திருந்த நிலையில் அது அனைத்தும் தங்க நகைகள் என்ற ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த நகைகளை படத்திற்காக ஸ்பான்சர் செய்த நிறுவனத்திற்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு. பொன்னியின் செல்வன் என்பது ஒரு வரலாற்று நாவலாகும் இந்த கதையை 1950 களிலேயே அமரர் கல்கி ஒரு வார இதழில் சிறுகதையாக எழுதி வந்தார் கல்கி. கதையின் விறுவிறுப்பு அதிகமாகவே ரசிகர்கள் இந்த கதையை மேலும் எதிர்பார்க்க, கதை நீண்டு கொண்டே போனது.

ஒரு கட்டத்தில் இந்த கதை ஐந்து பாகங்களாக வெளியாகும் அளவிற்கு மிகப்பெரிய நாவலாக ஒரு உருவானது. இந்த நாவலை படமாக்க வேண்டும் என்று பலரும் முயற்சித்தனர். ஏனென்றால் இது திருச்சி தஞ்சை பகுதிகளில் வாழ்ந்த சோழர்களைப் பற்றிய ஒரு கதையாகும். சோழர்கள் மூவேந்தர்களில் ஒருவர் ஆவார் குறிப்பாக ராஜராஜ சோழனும், ராஜேந்திர சோழனும் இலங்கை, மாலத்தீவு, ஜாவா, சுமத்ரா தீவுகள், தாய்லாந்தின் சில பகுதிகள், மலேசியா போன்ற ஆசியாவின் பல பகுதிகளை தங்களின் ஆட்சி பகுதிகளாக வைத்திருந்தனர். எனவே இந்த கதையை படமாக்கி, தமிழர்களின் பெருமையை குறிப்பாக சோழர்களின் பெருமையை உலகறிய செய்ய பலரும் முயன்றனர். ஆனால் தற்போது அதை மணிரத்னம் முடித்து காட்டியிருக்கிறார். இரண்டு பாகங்களாக வெளிவர இருக்கிறது. இந்த படம் முதல் பாகம் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டீசர் வெளியாகி பல லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது. சமீபத்தில் இந்த நாவலின் முதல் பகுதியான வந்தியத்தேவன் ஆடிப்பெருக்கு விழாவை காணும் நிகழ்ச்சியை பொன்னி நதி என்னும் தலைப்பில் பாடலாக வெளியிட்டுள்ளனர்.

இந்தப் பாடலை ஏ ஆர் ரகுமான் பாடியிருக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது இந்த படம். இந்த படத்திற்கான பொருட்செலவும் மிக அதிகம். அந்த காலத்து வரலாற்றை எழுதுவது அவ்வளவு சுலபம் கிடையாது. அதற்கான உடைகள், நகைகள், இடம்தேர்வு போன்றவை இதில் முக்கியமானதாக கருதப்படும். மேலும் குதிரைகள் யானைகள், கோட்டைகள் என்று மிகப் பிரம்மாண்டமாக இந்த படத்தை இயக்கியிருக்கிறார் மணிரத்தினம். இந்த நிலையில் டீசர் வெளியான போது, இந்த படத்தில் குந்தகையாக வரும் திரிஷாவும், நந்தினியாக வரும் ஐஸ்வர்யாராயும் கழுத்துகளிலும், தலைகளிலும் பல நகைகளை அணிந்திருப்பர். இந்த நகைகள் அனைத்தும் கவரிங் என்று பலர் நினைத்திருந்த நிலையில் இது அனைத்தும் ஒரிஜினல் தங்க நகைகள் என வீடியோ வெளியிட்டுள்ளது படக்குழு. இந்த தங்க நகைகளை கிஷன் தாஸ் அண்ட் கோ என்ற ஜுவல்லரி நிறுவனம் வழங்கியிருப்பது தற்போது உறுதியாகி உள்ளது.

இளவரசர்கள் மற்றும் இளவரசிகள் என்றாலே நகைகள் மற்றும் கிரீடங்கள் அணிந்து இருப்பார்கள். அதன் உண்மைத் தன்மைக்காக அதை தங்கத்திலேயே வழங்கி படத்திற்கு உதவிய அந்த நிறுவனத்திற்கு நன்றி செலுத்தும் இடமாக
படக்குழு அந்த வீடியோவை வெளியிட்டுள்ளது. Twitter Original Source from: Madras Talkies
All that glitters is gold! Glad to have @KishanDasandCo as our jewellery sponsors for #PS1 !
In theatres on 30th September in Tamil, Hindi, Telugu, Malayalam and Kannada! #ManiRatnam #ARRahman #PonniyinSelvan @LycaProductions @arrahman @tipsofficial @primevideoin pic.twitter.com/4ktsqMp8aN
— Madras Talkies (@MadrasTalkies_) August 8, 2022