Categories: சினிமா

காமெடியில் கலக்கி இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்.! “சொப்பன சுந்தரி” படம் எப்படி இருக்கிறது.? முழு விமர்சனம்.!

வெளியிட்டது

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தீபா ஷங்கர், லட்சுமி பிரியா, கருணாகரன் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் சொப்பன சுந்தரி. இந்த திரைப்படம் இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பல திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படத்தை ஹம்சினி என்டர்டைன்மெண்ட், மற்றும் ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கின்றன. எல்ஜி சார்லஸ் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். விஷால் சந்திரசேகர் மற்றும் அஜ்மல் தசீன் ஆகிய இருவர் படத்திற்கு இசையமைத்திருக்கின்றனர். படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த மக்கள் பலரும் படம் மிகவும் நன்றாக இருந்ததாக கூறினர். தற்போது இந்த படம் எப்படி இருக்கிறது என்கிற முழு விமர்சனத்தை பார்க்கலாம். சமீப காலமாக அரைத்த மாவையே அரைத்துக் கொண்டும், ஒரே டெம்ப்ளேட்டை வைத்து படம் எடுக்கும் இயக்குனர்களுக்கு இன்னும் சொல்லப்படாத பல கதைகளும், நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை கதையாக கொண்டு சிறந்த படங்களை எடுக்கலாம் என்று இந்த படம் அழகாக எடுத்துக் காட்டி இருக்கிறது.

காமெடியில் கலக்கி இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்.! "சொப்பன சுந்தரி" படம் எப்படி இருக்கிறது.? முழு விமர்சனம்.! 1
சென்னையில் ஒரு குடிசைப் பகுதியில் ஏழை குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். இவருடைய அப்பா படுத்த படுக்கையாக இருக்கும் நோயாளி. அம்மா தீபா ஷங்கர் அதிகமாக வாய் பேசும் ஒரு தாய். அக்கா லட்சுமி பிரியா பேச முடியாதவர். காதலித்து திருமணம் செய்து கொண்ட அண்ணன் கருணாகரன் என்று தினுசாக இருக்கும் குடும்பத்தில் வாழ்ந்து வருகிறார். நகை கடையில் வேலை பார்த்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷிற்கு குலுக்கலில் ஒரு சீட்டு விழுகிறது. அந்த சீட்டில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு கார் பரிசாக கிடைக்கிறது. ஆனால் அந்த சமயத்தில் ஐஸ்வர்யாவின் அண்ணன் கருணாகரன் தான் வாங்கிய நகைக்கு கிடைத்த குலுக்கலில் தான் இந்த கார் கிடைத்தது என்று சொல்லி காரை தனதாக்க முயற்சிக்கிறார். மேலும் இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கிறார். இதனால் பரிசாக விழுந்த கார் போலீஸ் ஸ்டேஷனிலேயே முடக்கி வைக்கப்படுகிறது. பின்னர் என்ன ஆனது.? அந்தக் காரை மீட்க என்னவெல்லாம் செய்கிறார்கள்.? ஐஸ்வர்யாவிற்கு அந்த கார் கிடைத்ததா? இல்லை கருணாகரனுக்கு கிடைத்ததா? என்பதுதான் படத்தின் மீதிக் கதை.


ஒரு குலுக்கல் போட்டி நடக்கிறது என்றால் அந்த கடையில் வேலை பார்ப்பவர்கள் கலந்து கொள்ள முடியாது என்ற விதி இருக்கிறது. ஆனால் அந்த விதியை மறந்து இயக்குனர் இப்படி ஒரு கதையை வைத்திருக்கிறார். பின்னர் அதை மறைக்க வேறு வேறு ட்விஸ்டுக்களை வைத்து சமாளிக்க முயற்சி செய்து இருக்கிறார். சென்னையில் பிறந்த ஒரு பெண் என்ற உடனேயே ஐஸ்வர்யாவிற்கு அந்த பாஷையும் அந்த வட்டார வழக்கம் சரளமாக வந்து விடுகிறது. சென்னை பெண் என்ற கதாபாத்திரத்தை கொடுத்தாலே நடிப்பில் அசத்தி எடுத்து விடுகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். குறிப்பாக அவர் பேச்சும், க்ளைமாக்ஸ் ஆக்ஷன் காட்சிகளிலும் மிரட்டி எடுத்து இருக்கிறார். வாய் பேச முடியாத அக்கா கதாபாத்திரத்தில் லட்சுமி பிரியாவும், அக்காவுக்கும் சேர்த்து அதிகம் வாய்ப்பு பேசும் அம்மா கதாபாத்திரத்தில் தீபா ஷங்கரும் ஒரு கலக்கு கலக்கி இருக்கிறார்கள். இவர்கள் மூவரும் சேர்ந்த ட்ரையோ காம்பினேஷன் வேற லெவலில் ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. ஐஸ்வர்யாவின் அண்ணனாக கருணாகரனும், மச்சானாக மைன் கோபியும் மெயின் வில்லன்களாக பக்காவாக நடித்துள்ளனர். எதார்த்தமான கதை, சிறந்த நடிகர்கள் தேர்வு, சிறப்பான நடிப்பு என்று சொப்பன சுந்தரி உண்மையில் பிளாக்பஸ்டர் வெற்றியாக அமைந்திருக்கிறது.


சிறிது நேரமே வந்தாலும் கலகலப்பை ஏற்படுத்தி விட்டு செல்கிறார் ரெடின் கிங்க்ஸ்லி. மேலும் சென்னை மற்றும் அதை சுற்றி இருக்கும் ஏரியாக்களில் நடக்கும் கதை என்பதால் மிக அழகாக ஒளிப்பதிவு செய்து இருக்கின்றனர் பாலமுருகன் மற்றும் விக்னேஷ் ராஜகோபாலன். விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் வலு சேர்த்து இருக்கிறது. இடைவேளை வரை படத்தில் சுனக்கம் இருக்கிறது. இடைவேளைக்கு பின்னர் சென்டிமென்ட். ஆக்ஷன், காமெடி என்று படம் விறுவிறுப்பைக் கூட்டி இருக்கிறது. ஹீரோக்களே இல்லாமல் ஹீரோயின்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உருவாகி இருக்கும் இந்த படம் உண்மையில் மிகப்பெரிய வெற்றி அடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. படத்தின் மையக்கருவான கதை ஒரு திருக்குறளுடன் நிறைவடைகிறது. “நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்” என்கிற குறளுடன் இந்த படம் நிறைவடைகிறது. அதற்குப் பொருள் நடுவுநிலைமை இன்றி அடுத்தவன் பொருளை அடைய நினைத்தால் அவனது குடி கெட்டு இல்லாமல் போய்விடும் என்பதுதான். மொத்தத்தில் சொப்பன சுந்தரி – பிளாக்பஸ்டர். இந்த படத்திற்கு தமிழ்க்ளிட்ஸ் வழங்கும் ரேட்டிங் 3.5/5

Youtube Video Embed Code Credits: Think Music India

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்