அம்மா என்ன ரூம்ல அடைச்சு வச்சி இருக்காங்க..அடிக்குறாங்க..என்ன யாருமே நம்ப மாட்றாங்க..கதறி அழுத ஸ்ரீநிதி

வெளியிட்டது

சமீபகாலமாக இணையத்தில் வைரலாகி வரும் ஒரு பெயர்தான் ஸ்ரீநிதி. நடிகர் சிம்பு பற்றி பல சர்ச்சை பேச்சுகளும், தனது நெருங்கிய தோழியின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் பேசி தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். ஸ்ரீநிதியின் தோழிகளே அவரை மெண்டல் மெண்டல் என்று தொடர்ந்து கூறியதால் அவர் மன உளைச்சலுக்கு உள்ளானதாக அவரது தாயாரே கூறியுள்ளார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ரீநிதி சிறு வயதிலேயே கிச்சன் சூப்பர் ஸ்டார்ஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தைப் பிடித்தார். பிறகு 7C தொடரில் கேபி போன்றவர்களுடன் இணைந்து நடித்துள்ளார். வீடியோ கீழே உள்ளது.

அம்மா என்ன ரூம்ல அடைச்சு வச்சி இருக்காங்க..அடிக்குறாங்க..என்ன யாருமே நம்ப மாட்றாங்க..கதறி அழுத ஸ்ரீநிதி 1

 

பின்னர் யாரடி நீ மோகினி, புதுப்புது அர்த்தங்கள் போன்ற சீரியல்களில் நடித்து வந்தார். வலிமை படம் வெளியான போது அதைப்பற்றி விமர்சனம் கூறியிருந்தார். அதனால் அஜீத் ரசிகர்கள் ஸ்ரீநிதியை கடுமையாக விமர்சித்தனர். அது தொடங்கி தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தார். தற்போது அவர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் சிம்பு வீட்டிற்கு முன்பு போய் நின்றது பலரின் கவனத்தை ஈர்ப்பதற்காக என்று கூறினார். நான் சிம்பு பின்னால் சுற்ற வேண்டிய அவசியம் இல்லை, சிம்புதான் என் பின்னால் சுற்ற வேண்டும் என்று கூறினார். தான் ஒரு முறை சிம்புவை பார்த்து நான் உங்களின் தீவிர ரசிகை என்று கூறிய போது அவர் தலையை மட்டும் ஆட்டினார் அதிலிருந்து சிம்புவை தனக்கு பிடிக்கவில்லை என்றும் கூறினார்

மேலும் தனக்கு அம்மாவை பிடிக்காது என்றும், வீட்டில் ரூமில் அடைத்து வைத்திருப்பதாகவும் கண்ணீர் விட்டு அழுதார். என்னை தானே அடித்துக் கொண்டு காயப்படுத்தியதாக சொன்னதெல்லாம் பொய், என்னை அடித்து காயப்படுத்தியது என் அம்மாதான் என்றும் கூறினார். என் அம்மா மிகுந்த மன அழுத்ததில் இருக்கிறார் அதனால் தன்னை ஷூட்டிங் கூட விடாமல் ரூமில் அடைத்து வைத்து இருக்கிறார், அவர் அப்படி செய்வதால் தானும் மன உளைச்சலுக்கு ஆளாகி நிறைய சிகரெட் பிடிப்பதாகவும் தெரிவித்தார். உண்மையில் ஸ்ரீநிதி மிகவும் மன அழுத்தத்தில் இருப்பதாகவும், வீட்டில் அடைத்து வைக்காமல் சரியான மருத்துவ ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் அவரின் வீடியோவின் கீழ் கமெண்டுகளை போட்டு வருகின்றனர். ஸ்ரீநிதியின் பேட்டியை நீங்களும் காண.. Watch the below Video..

Video Code Embed Credits: Galatta Tamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்