சில நாட்களாக சிம்புவை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஸ்ரீநிதி பேசி வந்த நிலையில் இன்று அவர் சிம்புவின் வீட்டிற்கே சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விஜய் தொலைக்காட்சியில் வெளியான 7C என்ற தொடரின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர்கள் தான் ஸ்ரீநிதி. யாரடி நீ மோகினி, புதுப்புது அர்த்தங்கள் போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வலிமை படம் குறித்து பேசி சர்ச்சையில் மாட்டிக் கொண்டவர் சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி. இதனால் அஜீத் ரசிகர்கள் இவரை வறுத்து எடுத்துவிட்டனர். உண்மையான அஜீத் ரசிகர்களாக இருந்தால் பெண்களை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் என்று கண்ணீருடன் பதிவிட்டு இருந்தார் ஸ்ரீநிதி. பிறகு தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். வீடியோ கீழே உள்ளது.

பிரபலம் ஆக வேண்டும் என்பதற்காக நெகட்டிவ் பப்ளிசிட்டி தேடி வருகிறார் என்று ஸ்ரீநிதியை கழுவி ஊற்றி வருகின்றனர் நெட்டிசன்கள். வலிமை சர்ச்சை ஓய்ந்த பிறகு சிம்பு குறித்து ஒரு பதிவிட்டார். அதில் அனைவருக்கும் திருமணம் ஆகியிருக்கும், ஒரு நாள் நானும் சிம்புவும் மட்டும்தான் மீதம் இருப்போம் என்று பதிவிட்டு இருந்தார். இதை பார்த்து கமெண்ட்டில் ஒருவர் நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமே? என்று கேட்க அதற்கு ஸ்ரீநிதி நல்லாதான் இருக்கும், ஆனா எனக்கு இப்ப ஆள் இருக்கே என்று கூறியிருந்தார்.

தற்போது அவரின் இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவர் சிம்புவை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று சிம்பு வீட்டின் முன்பு போய் காத்து கிடக்கிறார். சிம்பு எனக்காக இன்னும் கல்யாணம் செய்து கொள்ளாமல் வெயிட் பண்ணிட்டு இருக்காரு என்றும், என்னையும் சிம்புவையும் சேத்து வைங்க என்றும், ஜல்லிக்கட்டுக்கு மட்டும் போராட்டம் பண்ணீங்க எங்க ரெண்டு பேரையும் சேத்து வைக்க போராட்டம் பண்ண மாட்டிங்களா என்றும் பதிவிட்டுள்ளார். அந்த வைரல் வீடியோவை நீங்களும் காண…Watch the below video…