விஜய் டிவியில் அறிமுகமான நடிகை ஸ்ரீநிதி. மலையாள சீரியல் நடிகையான இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான “செந்தூர பூவே” தொடரில் தமிழில் அறிமுகமானார். முதல் சீரியலிலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். சமீபத்தில் இந்த தொடர் முடிவடைந்தது. நடிகர் ரஞ்சித்திற்கு ஜோடியாக இந்த தொடரில் அவர் நடித்திருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இப்பொது பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து வருகிறார். தற்போது இவர் மலையாளத்தில் பாக்கியலட்சுமி என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதில் பேசும் போது “நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போதே ஒரு மலையப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அப்போது அதுகுறித்து நானும் என் அம்மாவும் பேச சென்றிருந்த போது, அங்கிருந்த மேனேஜர் நேரடியாகவே எங்களிடம் அட்ஜஸ்ட்மென்ட் செய்வீர்களா? என கேட்டார். அப்போது அவர் கூறியது எனக்கு புரியவில்லை, ஆனால் என் அம்மாவிற்கு கொஞ்ச புரிந்தது. உடனே அம்மா இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு எங்களுக்கு வேண்டாம் என் கூறினார்.
அப்போது அவர்கள் மகள் இல்லை என்றாலும் பரவாயில்லை, அம்மா ஓகே தான் என கூற என் அம்மா முற்றிலுமாக உடைந்து போனார். என்னை அங்குஇருந்து கூட்டிக்கொண்டு வெளியே வந்து விட்டார். பலரும் ஏன் படங்களில் நடிப்பதில்லை என கேட்பதற்கு இதுவும் ஒரு காரணம் தான், எல்லோரையும் நான் கூறவில்லை, என்னிடம் தப்பாக பேசியவர்களை மட்டுமே நான் கூறுகிறேன்” என வருத்தத்தோடு கூறினார்.
Video Courtesy – IBC மங்கை.