18 ஆண்டுகள் கழித்து மீண்டும் மோதவுள்ள தனுஷ் சிம்பு படங்கள்!! எதிர்பார்ப்பை எகிறவைக்கும் இரண்டு படங்களுமே ஒரே தினத்தில் வெளியாகின்றன!!

வெளியிட்டது

18 ஆண்டுகள் கழித்து மீண்டும் மோதவுள்ள தனுஷ் சிம்பு படங்கள்!! எதிர்பார்ப்பை எகிறவைக்கும் இரண்டு படங்களுமே ஒரே தினத்தில் வெளியாகின்றன!! 1

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் போட்டி நடிகர்கள் இருப்பது இயல்பான ஒன்றுதான்.என்னதான் நடிகர்களுக்குள் போட்டி இல்லை என்றாலும் ரசிகர்கள் அவர்களை போட்டி நடிகர்களாகவே நினைப்பார்கள்.

எம்.ஜி.ஆர் – சிவாஜி, ரஜினி -கமல், விஜய் – அஜித் என ஒவ்வொரு காலகட்டத்திலும் நடிகர்களுக்குள் போட்டி நிலவி வரும். அந்த வரிசையில் சிம்பு மற்றும் தனுஷ் ஆகியோரும் இணைவார்கள். சமகாலத்தில் சினிமா துறையில் அறிமுகமான இவர்கள் ஆரம்பகாலகட்டத்தில் இருந்தே போட்டி போட்டு படங்களில் நடித்து வருகின்றனர்.

இன்றைய தலைமுறையின் முன்னணி நடிகர்களாக போட்டிபோட்டுக்கொண்டு வருபவர்கள் நடிகர்கள் விஜயும் அஜித்தும். அடுத்தடுத்து வெளியாகும் இவர்களுடைய படங்கள் மாறி மாறி வசூல் சாதனைகள் செய்து வருகின்றன. இவர்களுக்கு அடுத்த இடத்திற்கு தனுஷ், சிம்பு என இருவரும் தான் ஆரம்பம் முதலே போட்டி போட்டு வருகிறார்கள். இப்பொது சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி போன்ற நடிகர்கள் முன்னேறி வந்தாலும், இப்போதும் முன்னணியில் இருப்பவர்கள் தனுஷும், சிம்புவும் மட்டுமே.

2002ஆம் ஆண்டு இருவரும் நாயகர்களாக திரை உலகில் அறிமுகமானார்கள். துள்ளுவதோ இளமை என்ற படத்தில் தனுஷும், காதல் அழிவதில்லை என்ற படத்தில் சிம்புவும் அறிமுகமானார்கள். இருவரும் சினிமா பின்னணியில் இருந்து வந்தவர்கள். அடுத்தடுத்து வெற்றி படங்கள் கொடுத்து இருவருமே இளம் வெற்றி நாயகர்களாக உலா வந்தார்கள்.

தனுஷ் காதல் கொண்டேன், திருடா திருடி, திருவிளையாடல் ஆரம்பம், பொல்லாதவன், படிக்காதவன், யாரடி நீ மோஹினி என அடுத்தடுத்த வெற்றிகளை கண்டார். சிம்புவும் மன்மதன், வல்லவன், கோவில், சரவணா, சிலம்பாட்டம், விண்ணைத்தாண்டி வருவாயா என தொடர் வெற்றிகளை கண்ட போதிலும், நடுவில் திடீரென உடல் எடை கூடிப்போனார்.

படப்பிடிப்புகளுக்கு தாமதமாக வருவது, சரியாக நடிப்பதில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளில் மாட்டி, ரெட்கார்டு பெற்று நடிப்பதற்கு தடை பெற்றார் சிம்பு. ஆனால் துவண்டு போகாமல், அனைத்தையும் சரி செய்து மீண்டும் பழைய சிம்புவாக சினிமாவிற்கு திரும்பி “மாநாடு” என்ற மாபெரும் வெற்றி படத்தை கடந்த ஆண்டு கொடுத்தார்.

சிம்பு நடிப்பதில் சரியாக இல்லாத போது, தனுஷ் ஹிந்தி படங்களில் நடிப்பது, தேசிய விருது வாங்குவது, ஹாலிவுட்டில் அறிமுகமாவது என மேல் மேலே சென்று கொண்டே இருந்தார். சிம்புவின் ரசிகர்களே பொறாமைப்படும் அளவிற்கு தனுஷ் மிக பெரிய வளர்ச்சியை பெற்று இருந்தார். இருப்பினும் இப்பொது மீண்டும் சிம்பு தன்னுடைய பழைய ஃபார்மிற்கு திரும்பி இருக்கிறார். மாநாடு படத்தை அடுத்து அவர் நடிக்கும் படங்கள் பல எதிர்பார்ப்பை கொண்டுள்ளது.

நடிகர் தனுஷின் மாறன் படத்தை தொடர்ந்து ஜவகர் கூட்டணியில் இணைந்து தற்போது திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை மிக பிரமாண்ட பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் என ஒரு மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.

அதே போல நடிகர் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் மூன்றாவது முறையாக கவுதம் வாசுதேவ் மேனன், ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சிம்பு இணைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. இந்த படத்தை ஐசரி கே கணேஷ்  தயாரித்துள்ளார். Siddhi ldhani, kayadu lohar, நீராஜ் என ஒரு மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த திரைப்படத்தில் நடித்து உள்ளது இதுவரை இல்லாத ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ளார். மேலும் இந்த படத்திற்காக தனது உடல் எடையை அதிரடியாகக் குறைத்து நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இரண்டு படங்களுமே ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி வெளியாக பெரிய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இதனால் சிம்பு மற்றும் தனுஷ் படங்கள் 18 ஆண்டுகள் கழித்து ஒரே நாளில் வெளியாகவுள்ளது. இதற்கு முன் 2004ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் சிம்புவின் “மன்மதன்” படமும் தனுஷின் “ட்ரீம்ஸ்” படமும் ஒன்றாக வெளியாகின. இதில் எந்த படம் வெற்றி என்பது சொல்லித்தெரியவேண்டிய அவசியம் இல்லை. 18 ஆண்டுகள் கழித்து இப்பொது மீண்டும் போட்டிபோட உள்ளதால் யார் வெற்றி பெற போகிறார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்