விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ என்றாலே காமெடி கலாட்டக்களுக்கு பஞ்சம் இருக்காது. நாடகங்களுக்கு இணையாக மக்களை மகிழ்விக்கும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றுதான் சூப்பர் சிங்கர். சீனியர் பிரிவில் 18 வயதிற்கு மேற்ப்பட்டவர்களும், ஜூனியர் பிரிவில் குழந்தைகளும் பாடி அசத்தி வரும் ஒரு நிகழ்ச்சி. எட்டு சீசன்களை கடந்துவிட்ட பிறகும் டாப் டிஆர்பி நிகழ்ச்சியில் ஒன்று என்று சொன்னால் மிகையில்லை. எளிய பிண்ணனியில் இருந்து வருபவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி அவர்களை வெள்ளித்திரையில் பிண்ணனி பாடகர்களாக மாற்றியுள்ளது சூப்பர் சிங்கர்.

அப்படி மிகவும் எளிய பிண்ணனியில் இருந்து வந்தவர்தான் அஜய் கிருஷ்ணா. சூப்பர் சிங்கர் மூலம் மக்களின் பேராதரவைப் பெற்றுள்ளார். இவர் பிரபல பிண்ணனி பாடகர் உதித் நாராயணன் அவர்களின் குரலை மிமிக்ரி செய்து அவர் போலவே பாடி அசத்துவார். சென்னையை சேர்ந்த இவர் பாட்டுத் துறையில் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தால் உதித் நாராயணன் அவர்களின் குரலை பாட்டில் மிமிக்ரி செய்து அசத்தினார். முதலில் உதித் போலவே பாடிய அவர் பின்பு மற்ற பாடகர்களின் பாடலை எடுத்து உதித் மாதிர பாடி அசத்தியிருப்பார். ஒரு முறை எஸ்பிபி அவர்களே அஜயின் திறமையை பார்த்து வியந்து போனார். நான் உதித்தை சந்திக்கும் போது உங்களை போல மிமிக்ரி செய்யும் ஒருவன் சென்னையில் இருக்கிறான் என்று கூறுவேன் என்று எஸ்பிபி கூறினார். Video Embed Credits: Behindwoods

சமீபத்தில் அஜய் கிருஷ்ணாவுக்கு ஜெஸ்ஸி என்பவருடன் திருமணம் நிச்சயமாகியிருந்த நிலையில் இன்று திருமணம் நடந்துள்ளது. தாலி கட்டிய பின் மனைவியின் நெற்றியில் முத்தமிட்டார் அஜய். பின்பு வீட்டிற்கு சென்று மறைந்த தனது தாயின் புகைப்படத்திற்கு முன் நின்று ஆசிர்வாதம் வாங்கினார். அஜயின் திருமணத்திற்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அஜய் கிருஷ்ணாவின் அழகிய திருமண நிகழ்வுகளை காண.. Watch the Below Video..