“அரங்கை சில நேரம் அதிர விட்ட பிரியங்கா”!! மிரண்டு போன கமல்

வெளியிட்டது

விக்ரம் படத்தின் ப்ரோமோஷனுக்காக நாலா பக்கமும் சுழுன்று சுழுன்று அனைத்து இடங்களிலும்  விசிட் அடித்து வருகிறார் நம் உலகநாயகன் கமலஹாசன். படம் வெளி வர இன்னும் 2 நாட்கள் உள்ளதால், அனைத்து வேலைகளும் சூடு பறக்க ஆரம்பித்து இருக்கிறது.

இதில் ஒரு பங்காக விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பங்கெடுத்து சிறப்பித்தார். விஜய் டிவியின் ஆஸ்தான அங்கர்களான மா.கா.பாவும், பிரியங்காவும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

விஜே பிரியங்கா, அறிமுகமான சிறுது காலங்களிலேயே விஜய் டிவியின் முக்கிய அங்கர் ஆகி போனார்.விரைவில் மக்களிடம் நன்மதிப்பை பெற்று சிறப்பான ஒரு தொகுப்பாளராக திகழுந்து வருகிறார். எந்த முக்கிய சினிமா பிரபலங்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியாக இருந்தாலும் அதற்கு இவர் தான் தொகுப்பாளர்.

"அரங்கை சில நேரம் அதிர விட்ட பிரியங்கா"!! மிரண்டு போன கமல் 1

அண்மையில் தன்னுடைய 30ஆவது பிறந்தநாளை கொண்டாடிய இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருப்பது குறிப்பிடத்தக்கது. சக தொகுப்பாளரான மா.கா.பாவுடனான இவருடைய கெமிஸ்ட்ரி மிக ரசிக்கும் படி இருக்கும். நிறைய விருதுகளும் இவர் தன்னுடைய தொகுப்பாளினி திறமைக்காக வாங்கியுள்ளார்.

இவர் சில ஆண்டுகள் முன்பு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கமலின் “மன்மதன் அன்பு” படத்தில் வரும் “who’s the hero?” பாடலை முதல் முறையாக பாடினார். முதல் முறையே அனைவரையும் இந்த பாட்டின் மூலம் அசத்தினார். அவ்வப்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் இவர் தொடர்ந்து இந்த பாடலை படி வருகிறார்.

இப்பொது கமல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்ததன் மூலம் அவர் முன்பும் இந்த பாடலை பாடி அசத்தியுள்ளார். இதனை கேட்ட கமல் “நீங்கள் உண்மையிலேயே சிறப்பாக பாடி அசத்திவிட்டீர்கள்” என எழுந்து நின்று கைதட்டி பிரியங்காவை உற்சாகப்படுத்தினார்.

இந்த செயலால் நெகிழ்ந்து போன பிரியங்கா ” எனக்கு இதுவே போதும், நான் விஜய் டீவியை விட்டு போறேன்” என சந்தோஷ வெள்ளத்தில் குதித்தார். ப்ரியங்கா கமல் தொகுத்து வழங்கிய “பிக் பாஸ் 5” கலந்து கொண்டு 2ஆவது இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விடியோவை நீங்களும் காண கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Video Courtesy -VijayTelevision

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்