பார்வையற்ற சிறுமி பாடிய பாடல்.! கண்கலங்கி அழுத ஒட்டு மொத்த அரங்கம்.! சூப்பர் சிங்கரில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தற்போது ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நடைபெற்றிருக்கிறது. பார்வை தெரியாத சிறுமி ஒருவர் பாடியதை கேட்டு அவர்கள் பெற்றோர் கண்கலங்கி அழுத நிலையில், தற்போது நடுவர்களும் உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கி இருக்கின்றனர். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் ஒரு நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். பல நல்ல குரல்களை அடையாளம் கண்டு தமிழ் திரையுலகுக்கு கொடுத்திருக்கின்றனர் என்று சொன்னால் அது மிகையில்லை. அந்த வரிசையில் சீனியர் ஜூனியர் என மொத்தம் ஒன்பது சீசர்களை முடித்து இருக்கும் இந்த நிகழ்ச்சி தற்போது ஜூனியரில் சீசன் 9-ஐ நடத்தி வருகிறது. இந்த சீசனிலும் வழக்கம் போல பிரியங்கா மற்றும் மாகாபா ஆனந்த் இருவரும் நிகழ்ச்சி தொகுப்பாளர்களாக இருந்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பார்வையற்ற சிறுமி பாடிய பாடல்.! கண்கலங்கி அழுத ஒட்டு மொத்த அரங்கம்.! சூப்பர் சிங்கரில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.! 1

தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் 9 ஆரம்பித்து சில நாட்கள் ஆன நிலையில் போட்டி தற்போது நாளுக்கு நாள் கடுமையாகி வருகிறது. இந்த நிலையில் பார்வையற்ற சிறுமி ஒருவர் தற்போது இந்த போட்டியில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார். என் குரல் என் கதை என்று ஒவ்வொரு போட்டியாளர்கள் தங்களைப் பற்றி அறிமுகம் செய்து கொள்வது போன்ற ஒரு வீடியோ ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் பார்வையற்ற சிறுமி தனக்கு பார்வை இல்லை என்று நான் என்றைக்குமே கலங்கியது கிடையாது, எனக்கு பார்வையாக எனது அக்கா உலகத்தை காட்டிக் கொண்டிருக்கிறார் என்று மகிழ்ச்சியுடன் பேசினார். மேலும் குக்கூ என்ற படத்தில் இருந்து “ஆகாசத்த நான் பாக்குறேன்” என்கிற பாடலை பாடினார். இந்த பாடல் பார்வையற்ற இருவருக்கு இடையில் இருக்கும் காதலை வெளிப்படுத்தும் படமாக இருந்த நிலையில், இந்த பாடலை பாடியதும் அரங்கமே நெகிழ்ச்சி அடைந்தது.

பின்னர் தனது சகோதரியின் வழியாக இந்த உலகத்தை நான் பார்க்கிறேன் என்று சொன்ன அந்த குழந்தையின் சகோதரியை அழைத்து வரவே அவர் நெகிழ்ச்சியுடன் அக்கா என்று கூற அரங்கமே ஒரு நிமிடம் சோகத்தில் உறைந்தது. பலருக்கும் அழுகை வர நடுவர்களும் உடைந்து போய் அழுகின்றனர். அந்த நிகழ்ச்சியான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்