தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது. ஆரம்பத்தில் வெற்றிக்கு போராடிய சூர்யா இன்று தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருப்பதற்கு காரணம் அவரின் கடின உழைப்பு மட்டுமே ஆகும். தற்போது சூர்யா அடுத்தடுத்து பெரிய படங்களில் நடித்து உள்ளார். இவரின் படங்களுக்கு ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் காத்து உள்ளனர்.

இவருக்கு அடுத்ததாக இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படம் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. கடந்த 10ஆம் தேதி வெளியாக இருந்த இப்படத்தை, வேட்டையன் படமும் அதே நாளில் வெளியாக இருந்ததால் அடுத்த மாதம் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தள்ளிவைத்து இருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா தனது 44வது படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் தனது 45வது படத்தில் தற்போது ஒப்பந்தம் ஆகி உள்ளார். நடிகரும் இயக்குனருமான ஆர்ஜே பாலாஜி சூர்யாவின் 45வது படத்தினை இயக்க உள்ளார். ஏஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். இப்படத்தின் அறிவிப்பு தற்போது அதிகாரபூர்வமாக வெளியாகி உள்ளது. இந்த கூட்டணியில் உருவாக இருக்கும் படத்திற்கு தற்போதே மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.