வேட்டையன் பட வசூலின் அதிகாரபூர்வ அறிவிப்பு..! GOAT-ஐ தோற்கடித்ததா…?

தமிழ் சினிமாவில் உச்சநடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. அண்மையில் இவருக்கு வெளியான ஜெயிலர் படம் மாபெரும் வசூலை வாரி குவித்தது. தற்போது நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து உள்ளார். இப்படத்தில் இவருடன் அமிதாப்பச்சன்,பகத் பாசில், அபிராமி , தூஸ்ரா விஜயன் ஆகியோர் நடித்து உள்ளனர்.

வேட்டையன் பட வசூலின் அதிகாரபூர்வ அறிவிப்பு..! GOAT-ஐ தோற்கடித்ததா...? 1

விளம்பரம்

இப்படம் கடந்த 10ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்கில் வெளியாகி உள்ளது. இப்படம் கலவையான விமர்சனங்களை மட்டுமே ரசிகர்களிடம் இருந்து தொடர்ந்து பெற்று வருகிறது. இருப்பினும் ரஜினி ரசிகர்கள் இப்படத்தை ஆர்வமாக திரையரங்கில் கண்டு களித்து வருகின்றனர்.இந்நிலையில் இப்படம் வெளியாகி 5 நாட்கள் ஆகிய நிலையில்,240 கோடி ரூபாய் வசூலை பெற்று உள்ளது.

வேட்டையன் பட வசூலின் அதிகாரபூர்வ அறிவிப்பு..! GOAT-ஐ தோற்கடித்ததா...? 3

விளம்பரம்

அதே சமயம் கோட் படம் வெளியாகி 13 நாட்களில் 413 கோடியை பெற்றிருந்த நிலையில், இனி வரும் நாட்களில் கோட் படத்தின் வசூலை வேட்டையன் படம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடையவை  தல அஜித்துடன் மீண்டும் பணிபுரியும் ஆசை! கெளதம் மேனன்!!

 

விளம்பரம்

 

View this post on Instagram

 

A post shared by Lyca Productions (@lycaproductions)

விளம்பரம்

Leave a Comment