மீம் கிரியேட்டர்ஸ்களால் Swiggy காதல் தோல்வி.! கதறி அழும் Youtuber.! வச்சி செய்யும் நெட்டிசன்கள்

வெளியிட்டது

இன்டர்நெட் காலம் பெருகியது முதல் இணையதளங்களில் பல வகையான வீடியோக்கள் உலா வருகின்றன. ஒரு youtube சேனலை தொடங்கி அதில் வருமானம் பார்க்க தொடங்கி இருக்கின்றனர் பலரும். ஆரம்பத்தில் டிக் டாக் செயலில் இருந்த பலரும் டிக் டாக் முடங்கிய பின்பு youtubeக்கு தாவினர். அப்படி தாவிய ஒரு டீம் தான் ராஜன் வகையறா. இவர்கள் 2k கிட்ஸ் இன் காதலை swiggy டெலிவரி பாய் காதல் என்கிற ரீதியில் வீடியோக்கள் வெளியிட்டு வந்த ஒரு டீம் ஆகும். இவர்களைப் பார்த்து மீம்ஸ் போடாதவர்களே இருக்க முடியாது என்று சொல்லலாம். பேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம் என்று எங்கு பார்த்தாலும் இவர்களின் முகம் வந்து கொண்டே இருந்ததால், இணையவாசிகள் மிகக் கடுப்பாகினர். தற்போது இந்த மீம்ஸ்களால் அவரின் காதலி அவரை விட்டுப் பிரிந்து விட்டதாக இந்த தொடரின் கதாநாயகன் கதறி அழும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

மீம் கிரியேட்டர்ஸ்களால் Swiggy காதல் தோல்வி.! கதறி அழும் Youtuber.! வச்சி செய்யும் நெட்டிசன்கள் 1

இது பற்றி அந்த கதாநாயகன் தற்போது ஒரு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். ஆரம்பத்தில் இவர்கள் அனைவரும் நல்ல கருத்து உள்ள வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளனர். ஆனால் அதற்கு சுத்தமாக வரவேற்பு இல்லாத காரணத்தால், மற்றொரு சேனலில் சொமேட்டௌ டெலிவரி பாய் ஒரு பெண்ணை காதலிப்பது போன்ற கண்டன்டு கிடைத்துள்ளது. அதை கலாய்ப்பது போல் ஒரு வீடியோக்களை எடுக்க ஆரம்பித்துள்ளனர். அந்த வீடியோக்களை மற்றவர்கள் எடுத்து தங்கள் சேனலில் பதிவிட, அது பல லட்சம் பார்வையாளர்களை அள்ளி உள்ளது. அப்போதுதான் அவர்களுக்கு ஒரு விஷயம் புரிந்துள்ளது. நல்ல கன்டென்ட் எப்பொழுதுமே ரீச் ஆகாது, இதுபோல கிரிஞ்ச் கன்டென்டுகள் தான் ரீச் ஆகும் என்று அவர்களுக்கு புரிந்துள்ளது.

இதனால் மொக்கை ஜோக்குகளை போட்டு வீடியோக்களை எடுத்து பார்க்கும் மக்களை எரிச்சல் அடைய வைத்தனர். இது ஒரு கட்டத்தில் எல்லை மீறி போக, இவர்களை கமெண்ட் மற்றும் மீம்ஸ்களால் இணையதள வாசிகள் வறுத்து எடுத்துவிட்டனர். அதனால் மனம் நொந்து போன அவருடைய காதலி அவரை விட்டு தற்போது பிரிந்து சென்றுள்ளார். அதை ஒரு வீடியோவில், நீங்கள் போட்ட மீம்ஸ்களால் என்னுடைய காதலி என்னை விட்டு பிரிந்து விட்டு சென்று விட்டதாக கூறி கதறி அழுகிறார் கதாநாயகன். இதற்கு காரணம் மீம்ஸ் கிரியேட்டர்கள் தான் என்றும் கண்ணீர் மல்க பேசியிருக்கிறார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்