தமன்னாவிற்கு விரைவில் திருமணம் ஆக உள்ளதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகி இருக்கும் நிலையில் தனது instagram பக்கத்தில் அவரே ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். அந்த புகைப்படம் தற்போது வைரரலாகி வருகிறது. கேடி என்கிற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்க்கு அறிமுகமானவர் நடிகை தமன்னா. ஆரம்பத்தில் ஹிந்தி படங்களில் நடிக்க தொடங்கிய இவருக்கு, கேடி திரைப்படம் திருப்புமுனையாக அமைந்திருந்தது. பின்னர் இவர் தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கும் பல நடிகர்களுடன் நடித்திருக்கிறார். தென்னிந்திய மொழிகளான கன்னடம் தெலுங்கு மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார். இவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் என்று சொன்னால் அது அயன் திரைப்படத்தை சொல்லலாம். இந்த படத்தின் மூலமாக அவர் பல ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார்.

படங்கள் மட்டுமல்லாமல் இவர் வெப் சீரிஸ் என சொல்லப்படும் ஓடிடி தொடர்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் சில காலமாகவே தமன்னாவிற்கு திருமணம் நடைபெற இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியானது. அப்பொழுதெல்லாம் அவர் தனக்கு திருமணம் நடைபெறவில்லை என்பதை உடனே மறுத்துவிடுவார். ஆனால் இந்த முறை அந்த செய்தி கிளம்பிய போது அவர் மறுப்பு ஏதும் சொல்லாமல் இருந்து வந்தார். இதனால் அவருக்கு திருமணம் நடைபெறுவது உறுதி என்று வதந்திகள் கிளம்பியது. மேலும் அவர் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. சமீபத்தில் ஹன்சிகாவும் தொழிலதிபர் ஒருவரை கரம்பிடித்ததால் தமன்னாவும் அவ்வாறு கரம் பிடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் தனது instagram பக்கத்தில் ஒரு புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருக்கும் தமன்னா, இவர்தான் நான் திருமணம் செய்து கொள்ளப் போகும் தொழிலதிபர் என்று ஒரு புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். பலரும் ஆர்வமாக அந்த புகைப்படத்தை பார்க்க தேடிய போது கடைசியில் அது தமன்னாவின் ஆண் வேடத்தில் இருக்கும் புகைப்படம் தான் என்பது தெரிய வந்தது. அதை வெளியிட்டு கேலியாக தனது வருங்கால கணவர் என்று அவர் பதிவிட்டு இருக்கிறார். இதனால் தனக்கு தற்போதைக்கு திருமணம் இல்லை என்றும், வருங்கால கணவர் குறித்தும் பரவும் வதந்திகளுக்கு தமன்னா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.