தளபதி விஜய் இன்ஸ்டாகிராமில் இணைந்த சில நாட்களிலேயே யாரும் செய்ய முடியாத சாதனையை செய்து காட்டி இருக்கிறார். கணக்கை தொடங்கிய நான்கே நாட்களில் அதிவேகமாக ஒரு மில்லியன் பாலோவர்களை எட்டும் நிலையில் தளபதி விஜய் உலக அளவில் சாதனை படைத்திருக்கிறார்.

தளபதி விஜய் தற்போது தனது 67வது படமான லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். வருகிற அக்டோபர் மாதம் இந்த படம் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் முடிந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் துவங்க இருக்கிறது.
படத்தில் நடிக்கும் அனைத்து பிரபலங்களும் இன்ஸ்டாகிராமில் படம் பற்றிய அப்டேட்டுகள் அல்லது புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் கூட காஷ்மீரில் இருந்து தளபதியுடன் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது பதிவேற்றி வந்தார். இந்த நிலையில் ரசிகர்கள் தளபதியும் இன்ஸ்டாகிராமில் இணைய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தளபதி விஜயும் இன்ஸ்டாகிராம் கணக்கை துவங்கியிருந்தார்.
துவங்கிய ஒரு மணி நேரத்திலேயே லட்சக்கணக்கான ஃபாலோவர்ஸை தாண்டி சென்று கொண்டிருந்தார். இந்த பக்கத்தினை அவரது அட்மின் நிர்வாகிப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே தனது ட்விட்டர் பக்கத்தை அவரது மேனேஜர் ஜெகதீஷ் நிர்வகித்து வருவதாக வாரிசு இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியிருந்தார். இந்த நிலையில் instagram பக்கமும் அட்மினால் நிர்வகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
Instagram கணக்கை தொடங்கிய உடனேயே லியோ சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ஒரு புகைப்படத்தையும் ஒரு ஸ்டோரியையும் போட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருந்தார் தளபதி. அந்த புகைப்படத்திற்கு மட்டும் 67 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் குவிந்திருந்தது. தளபதி வெளியிட்டு இருந்த அந்த புகைப்படத்தை பலரும் தங்கள் முகப்பு புகைப்படமாக மாற்றி இருந்தனர்.