கிளைமாக்ஸ்-ல அழுதுட்டேன்.! புகழ் அழ வச்சிட்டாரு..! 1947 படம் பற்றி கண்கலங்கி பேசிய பொதுமக்கள்.!

இன்று தமிழகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் 1947 படம் குறித்து தற்போது பொதுமக்கள் பாசிட்டிவான கருத்துக்களை கூறி வருகின்றனர். படம் மிகவும் நன்றாக இருந்ததாகவும், சுதந்திர போராட்ட காலத்தைச் சேர்ந்த பீரியாடிக் படத்தைக் கூட மிக நேர்த்தியாக எடுத்திருப்பதாகவும் இயக்குனருக்கும் நடிகர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். நடிகர் கௌதம் கார்த்திக் குக் வித் கோமாளி பிரபலம் புகழ் ஆகியோர் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் ஆகஸ்ட் 16 1947. இந்த திரைப்படத்தை ஏ ஆர் முருகதாஸ் இடம் உதவி இயக்குனராக இருந்த அறிமுக இயக்குனர் பொன் குமார் இயக்கியிருக்கிறார். நீண்ட நாட்களாக எந்த படத்தையும் தயாரிக்காமல் இருந்து வந்த ஏ ஆர் முருகதாஸ் தற்போது இந்த படத்தை தயாரித்திருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கிளைமாக்ஸ்-ல அழுதுட்டேன்.! புகழ் அழ வச்சிட்டாரு..! 1947 படம் பற்றி கண்கலங்கி பேசிய பொதுமக்கள்.! 1
ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு கிடந்த இந்தியா ஆகஸ்ட் 15ஆம் தேதி 1947 ஆம் ஆண்டு சுதந்திர காற்றை சுவாசித்தது. அப்போது ஒரு கிராமத்திற்கு மட்டும் அந்த செய்தி கிடைக்காமல் இருந்தது. அதற்கு அடுத்த நாளான 1947 ஆகஸ்ட் 16ஆம் தேதி அந்த கிராமத்திற்கு என்ன நடந்தது என்கிற கதையை மையமாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. வித்தியாசமான கதை அம்சத்துடன் எடுக்கப்பட்டிருந்த இந்த படம் தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த பொதுமக்கள் பலரும் கெளதம் கார்த்திக் மற்றும் புகழை நடிப்பை வெகுவாக பாராட்டினர். மேலும் அறிமுக நாயகியாக இருந்த போதிலும் ஹீரோயினும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக பொதுமக்கள் கருத்துக்களை கூறினர் இத்தனை காலமாக நம்மை சிரிக்க வைத்து வந்த புகழ் கிளைமாக்ஸ் காட்சிகளில் நம்மை அழ வைத்து விட்டதாகவும் அவர்கள் கருத்து கூறினர்.

விளம்பரம்
தொடர்புடையவை  கார் விபத்தில் சிக்கிய குக் வித் கோமாளி பிரபலம் சக்தி.! தற்போதைய நிலை என்ன.?

கிளைமாக்ஸ்-ல அழுதுட்டேன்.! புகழ் அழ வச்சிட்டாரு..! 1947 படம் பற்றி கண்கலங்கி பேசிய பொதுமக்கள்.! 3
இந்தப் படம் குறித்து பேட்டி அளித்த கௌதம் கார்த்திக், அவரது மனைவி மஞ்சுமா மோகனும் இந்த படம் மிக நன்றாக வந்திருப்பதாகவும், படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகர்களும் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாகவும் பேட்டி அளித்தனர். மேலும் இறைவன் தனக்கு கொடுத்த ஒரு திருப்புமுனையாக இதை கருதுவதாக கௌதம் கார்த்திக் பேட்டியளித்திருந்தார். அதேபோல புகழும் படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுடன் இந்த படத்தை பார்த்ததை நான் மிகப்பெரிய வாய்ப்பாக கருதுகிறேன். முருகதாஸ் தன்னை மிகவும் ஊக்கப்படுத்தி உன்னால் முடியும் என்று சொல்லி இந்த கதாபாத்திரத்தை எனக்கு வழங்கினார்் இந்த படத்திற்கு பின்னர் என் வாழ்க்கையே மாறப்போகிறது என்று பெருமையுடன் புகழ் பேசினார். தொடர்ந்து பொதுமக்களும் படம் குறித்த பாசிட்டிவான விமர்சனங்களை கூறி வருகின்றனர். நீங்களும் அவர்கள் கூறிய விமர்சனங்களை பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Shruthi TV

விளம்பரம்

Leave a Comment