தாமரையின் மூத்த மகனை பார்த்து இருக்கீங்களா? அம்மாவை அப்படியே உரித்து வைத்து இருக்கும் மகன் சிவா.!

வெளியிட்டது

பிக்பாஸில் கலந்து கொண்டு பிரபலமானவர் தாமரைச்செல்வி. இவர் தற்போது பிரிந்து சென்ற தனது மூத்த மகனுடன் மீண்டும் இணைந்து இருக்கிறார். அந்த புகைப்படங்களை அவரே தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். வறுமையின் பிடியில் இருக்கும் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக சிறு வயதிலேயே நாடகங்களில் கலந்து கொண்டு தனது குடும்ப வறுமையை போக்க பாடுபட்டவர் தாமரைச்செல்வி. இவர் தெருக்கூத்து கலைஞராகவும் மேடை நாடக கலைஞராகவும் வேலை பார்த்து வந்தார். கோவில் திருவிழாக்கள் மற்றும் மேடை நாடகங்களில் நாடகமாடியும், தெருக்கூத்துகள் செய்தும் இவர் தனது வாழ்க்கையை நடத்தி வந்தார். இந்த நிலையில் அவருக்கு பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ் சீசன் 5ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார் தாமரைச்செல்வி. இந்த நிகழ்ச்சியின் போது தனக்கு முதல் திருமணம் ஆகி ஒரு மகன் இருப்பதாகவும் ஆனால் அவர் தன்னிடம் பேசுவதில்லை, அவரது தந்தையுடன் வாழ்ந்து வருகிறார் என்று கண்ணீர் மல்க கூறி இருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டள்ளது. 

தாமரையின் மூத்த மகனை பார்த்து இருக்கீங்களா? அம்மாவை அப்படியே உரித்து வைத்து இருக்கும் மகன் சிவா.! 1

மேலும் விரைவில் தன்னை புரிந்து கொண்டு மகன் தன்னிடம் வந்து இணைவார் என்றும் பேசி இருந்தார். தாமரைச்செல்விக்கு முதலில் திருமணம் ஆகி சிவா என்கிற மகன் இருக்கிறார். அதற்கு பின்னர் அவர் இரண்டாவதாக பார்த்தசாரதி என்பவரை திருமணம் செய்து கொண்டு தற்போது அவருடன் வாழ்ந்து வருகிறார். பிக பாஸில் இருந்து வெளியேறிய தாமரை பின்னர் மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

ஆனால் எந்த நிகழ்ச்சியிலும் அவரால் வெற்றிபெற முடியவில்லை. பிபி ஜோடிகள் என்னும் நடன நிகழ்ச்சியிலும் தனது கணவருடன் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியிலும் அவரால் வெற்றி பெற முடியவில்லை. தொடர்ந்து பங்குபெறும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் தோல்வியே சந்தித்து வருகிறார் தாமரைச்செல்வி. இருந்த போதிலும் தனது அயராத உழைப்பையும் நூறு சதவீத பங்கெடுப்பையும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் இன்று தனது மூத்த மகனுடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார் தாமரைச்செல்வி.

தாமரைச்செல்வியையும், அவரது மூத்த மகனையும் எப்படியாவது இணைத்து வைத்து விட வேண்டும் என்று பலரும் முயற்சி செய்தனர். குறிப்பாக பிக்பாஸ் வெற்றியாளர் ராஜு கூட ஒருமுறை பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் அது பற்றி கூறியிருந்தார். உனது மூத்த மகனுடன் உன்னை சேர்த்து வைப்பேன் என்று ராஜு தாமரைக்கு உறுதி அளித்திருந்தார். இந்த நிலையில் திடீரென தனது மூத்த மகன் சிவாவை பார்த்து அவருடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார் தாமரை. அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. உன் மகனுடன் மீண்டும் இணைந்து இருக்கிறாய். இதே போல் அவருடன் சந்தோஷமாக இரு என்று அனைவரும் தாமரையை வாழ்த்தி வருகின்றனர். தாமரை, அவரது கணவர் மற்றும் தாமரையின் மூத்த மகன் சிவா ஆகியோர் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. Watch the Below Video.! 

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்