விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியல் முடிவுக்கு வந்துள்ளது. இந்த நாடகத்தில் நடிக்கும் நடிகர்கள் சிலர் கடைசி நாள் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து இருக்கின்றனர். இதனால் இந்த சீரியல் முடிவுக்கு வருவது தற்போது உறுதியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2021ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் ஒரு டாப் ஹிட் சீரியல் தான் ‘தமிழும் சரஸ்வதியும்’. இதில் தீபக் ஹீரோவாக நடிக்க, நட்சத்திரா நாகேஷ் ஹீரோயினாக நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் மீரா கிருஷ்ணன், சங்கீதா, நவீன் வெற்றி, ரயான் போன்ற பலர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
தற்போது கதைப்படி தமிழ் மற்றும் அவரது தங்கை ராகிணி குடும்பத்திற்கு ஏழாம் பொருத்தமாக இருந்து வருகிறது. ராகிணி தனது கணவருக்கு ஆதரவாக பிறந்த வீட்டை எதிர்த்து வருகிறார். இந்த நிலையில் இந்த வாரம் வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ராகிணி தமிழின் குழந்தையை காப்பாற்றி கொடுத்திருக்கிறார்.
ஆபத்தான கட்டத்தில் அனுமதிக்கப்பட்ட தமிழின் மனைவி சரஸ்வதிக்கு பிரசவம் பார்த்து வெற்றிகரமாக குழந்தையை பெற்றெடுத்து கொடுத்திருக்கிறார். மேலும் அர்ஜுனனுக்கும் நினைவு திரும்பி தனது மாமா தான் தன்னை தாக்கி கோமா நிலைக்கு அனுப்பிவிட்ட உண்மையை கூறுகிறார்.
இதனால் இந்த கதை முடிவை நெருங்குவதை ரசிகர்கள் தற்போது தெரிந்து கொண்டனர். நிலைமை இப்படி இருக்க, இந்த சீரியலில் வசு என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை சங்கீதா கடைசி நாள் ஷூட்டிங் அட்டவணை என்று சில வீடியோக்களை பகிர்ந்து இருந்தார்.
அதில் சரஸ்வதியாக நடித்து வரும் நட்சத்திரா மற்றும் மாமியாராக நடித்து வரும் மீரா கிருஷ்ணன் இருவரையும் மிகவும் மிஸ் செய்கிறேன் என்று பகிர்ந்து இருந்தார். இந்த நிலையில் நேற்று இரவு ஹீரோ தீபக்கும் சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து இருந்தார்.
அதில் சீரியல் முடிவுக்கு வந்து விட்டதாகவும், கடைசி நாள் ஷூட்டிங் என்றும் கேக் வெட்டி பிரிந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O