விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் ‘தமிழும் சரஸ்வதியும்’ தொடரின் நடிகை ஒருவருக்கு இன்று திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது. தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடிகர் தீபக் நக்ஷத்ரா, நவீன் வெற்றி ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

கம்பெனியை மையமாக வைத்து ஓடிக் கொண்டிருக்கும் இந்த தொடர் தற்போதைய சிறிது சுணக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையிலும், ரசிகர்கள் தொடர்ந்து சீரியலை விரும்பி பார்த்து வருகின்றனர். இந்த சீரியலில் சமீபத்தில் மேகனா என்கிற கதாபாத்திரத்தை புதிதாக உள்ளே கொண்டு வந்திருந்தனர். அந்த கதாபாத்திரம் கொலை செய்யப்பட்டு முடிவடைந்து விட்டதாக காட்டப்பட்டு வருகிறது. மேகனா கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை அக்ஷிதா. இவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். கன்னட சீரியல்களில் அறிமுகமாகி பின்னர் தமிழுக்கு வந்தார்.
2017ம் ஆண்டு ஒளிபரப்பான ‘அழகு’ என்ற சீரியல் மூலமாக தமிழில் நடிக்கத் தொடங்கினார். பின்னர் கன்னட திரைப்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இருப்பினும் படங்களில் பெரிய அளவிற்கு அவருக்கு வரவேற்பு கிடைக்காத நிலையில் மீண்டும் சின்னத்திரை பக்கம் திரும்பினார். சன் டிவியில் ஒளிபரப்பான ‘கண்ணான கண்ணே’ என்கிற தொடரில் நடித்திருந்தார். அந்த சீரியலுக்கு பின்னர் ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலுக்கு வந்த அவர், மேகனா கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
இந்த கதாபாத்திரம் திடீரென முடிவடைந்த நிலையில் தற்போது சில படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று நடிகை அக்ஷிதாவிற்கும், பெங்களூருவைச் சேர்ந்த எக்சிகியூட்டிவ் ப்ரொடியூசர் மற்றும் நடிகரான ப்ரீத்தம் சுரேஷ் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கிறது. இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அக்ஷிதா பகிர்ந்து இருக்கிறார். பலரும் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.