‘தமிழும் சரஸ்வதியும்’ தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தனக்கு ஆதரவாக பேசிய தமிழை மேகனா சென்று கட்டி அணைத்துக் கொள்கிறார். இதனால் இருவருக்குள்ளும் காதல் மலரும் என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. தமிழும் மேகனாகவும் கட்டிப் பிடித்துக் கொண்டிருப்பதை அர்ஜுன் பார்த்து விடுகிறார். இதனால் ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் அடுத்த பூகம்பம் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலில் தற்போது கதைக்களம் வேறு விதமாக மாறிக் கொண்டிருக்கிறது. கதாநாயகன் தமிழிடம் தொழிலதிபர் பெண் மேகனா என்பவர் காதல் கொள்வது போன்ற கதையை இயக்குனர் நகர்த்தி வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழுக்கும் தொழிலதிபராக இருக்கும் மேகனா என்பவருக்கும் அறிமுகம் ஏற்படுகிறது. பின்னர் இவர்கள் இருவரும் தொழில் ரீதியாக இணைந்து பணியாற்ற தொடங்கி இருக்கின்றனர். தமிழ் கொடுத்த சில ஐடியாக்கள் மேகனாவிற்கு பிடித்த போகவே, அதை தனது கம்பெனியில் செயல்படுத்தி வருகிறார் மேகனா. இந்த நிலையில் இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் இந்த ஆண்டிற்கான சிறந்த தொழிலதிபருக்கான விருது மேகனாவிற்கு கிடைக்கிறது. இது குறித்து மேகனா இது என்னுடைய வெற்றி மட்டுமல்ல இந்த விருது கிடைப்பதற்கு காரணம் தமிழும் என்று சொல்லி தமிழை மேடையில் அழைத்து விருதை வழங்குகிறார். அப்போது விருது கொடுத்தவர் இந்த விருது உன் திறமைக்கு மட்டுமல்ல உன் அழகுக்கும் சேர்த்து தான் என்று மேகனாவிடம் கூறுகிறார்.

விருது கொடுத்தவரின் இந்த வெறுப்பு பேச்சை கேட்ட தமிழ், அவரிடம் சென்று இதுபோன்ற ஆண்களால் தான் முன்னேறத் துடிக்கும் பெண்கள் வளர முடியவில்லை என்று சொல்லி சண்டை போடுகிறார். இதனால் நெகிழ்ந்து போன மேகனா ஓடி வந்து தமிழை கட்டி பிடித்துக் கொள்கிறார். அதை சரஸ்வதியும் பார்க்கவில்லை. ஆனால் அர்ஜுன் பார்த்து விடுகிறார். இதனால் ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் அடுத்த பூகம்பம் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television