தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தற்போது கோதை மற்றும் குடும்பத்தினரை அர்ஜூன் வீட்டை விட்டு வெளியே அனுப்பிய நிலையில் தற்போது இணையத்தில் புது புகைப்படங்கள் கசிந்துள்ளது. அதில் சரஸ்வதி வீட்டில் இருந்து கோதை வசு ஆகியோர் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டுள்ளனர். இந்த படங்களை பார்த்த பலரும் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் இப்படி தமிழ் வீட்டில் போய் வசித்து வருகிறீர்களே என்று காமெடியாக கலாய்த்து வருகின்றனர். விஜய் தொலைக்காட்சியில் தற்போது டாப் ஹிட் சீரியலாக ஓடிக்கொண்டிருக்கிறது தமிழும் சரஸ்வதியும் சீரியல். இந்த சீரியலில் தற்போது அர்ஜுன் கோதையிடமிருந்து வீடு மற்றும் கம்பெனி என அனைத்து சொத்துக்களையும் பறித்துக்கொண்டு அவரை வீட்டில் இருந்தே வெளியே அனுப்பி விட்டார்.

தற்போது வெளியான ப்ரோமோவில் இந்த செய்தியை தெரிந்து கொண்டு நேராக வீட்டுக்கு செல்லும் தமிழ் அர்ஜூனை அடித்து துவைக்கிறார். மேலும் அர்ஜுன் தலையில் பூந்தொட்டியைப் போட்டு அவரை கொலை செய்யவும் முயற்சிக்கிறார். ஆனால் ராகிணி குறுக்கிட்டதால் அவர் அர்ஜூனை விட்டுவிட்டு கோவிலுக்கு செல்கிறார். அங்கு கோவிலில் கோதை மற்றும் நடேசன் ஆகியோர் குடும்பத்துடன் அமர்ந்திருக்கின்றனர். அவர்களிடம் பேசும் தமிழ், “என் நினைப்பே யாருக்குமே வரவில்லையா? நான் என்ன செத்தா போய்விட்டேன்? எல்லோரும் என்னுடன் வீட்டிற்கு வாருங்கள் என்று அழைத்து செல்கிறார்” இதனால் ஒட்டு மொத்த குடும்பமும் இனி தமிழ் வீட்டில் தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கதை இப்படியாக நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ஒரு புகைப்படம் வெளியாகியிருக்கிறது. அதில் சரஸ்வதி வீட்டில் கோதை, வசு, சரஸ் என மூவரும் போட்டோ எடுத்துக் கொண்டுள்ளனர். அந்த புகைப்படங்களை பார்த்த பலரும் இத்தனை நாள் தமிழை திட்டிக் கொண்டிருந்தீர்கள்? இப்பொழுது வெட்கமே இல்லாமல் அவர் வீட்டிலேயே சென்று சிரித்து போஸ் கொடுத்து கொண்டு இருக்கிறீர்கள்? என்று காமெடியாக கலாய்த்து வருகின்றனர்.