விஜய் தொலைக்காட்சியின் புது சீரியலில் கமிட் ஆன சாய் காயத்ரி.! ஹீரோ இவர் தானா.?

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கடைசி மருமகளாக நடித்த சாய் காயத்ரி சமீபத்தில் அந்த சீரியலை விட்டு விலகி இருந்த நிலையில் மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் புது சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க அவர் ஒப்பந்தமாகி இருக்கிறார். அந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பலரும் சாய் காயத்திற்கு தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே பாகம் 1 நடித்ததன் மூலமாக பிரபலமானவர் நடிகை சாய் காயத்ரி. அதன் பின்னர் இவருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

விஜய் தொலைக்காட்சியின் புது சீரியலில் கமிட் ஆன சாய் காயத்ரி.! ஹீரோ இவர் தானா.? 1

விளம்பரம்

ஐஸ்வர்யா கதாபாத்திரம் நெகட்டிவ்வாக மாற இருப்பதால் தனக்கு இந்த கதாபாத்திரத்தில் தொடர விருப்பம் இல்லை என்று சொல்லி சீரியலை விட்டு விலகி அதிரடி காட்டி இருந்தார் சாய் காயத்ரி. இந்த நிலையில் அவர் தற்போது புதிய சீரியல் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார் விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் “நுவ்வு நேனோ பிரேமா” என்கிற சீரியலின் தமிழ் ரீமேக்கில் அவர் இரண்டாவது கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. மறைந்த இயக்குனர் தாய் செல்வம் சார்பில் தாய் புரொடக்ஷன்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Tamil Serials (@tamilserialexpress)

விளம்பரம்

இந்த நிறுவனத்தின் சார்பில் தெலுங்கு சீரியலாக இருக்கும் “நுவ்வு நேனா பிரேமா” என்கிற சீரியல் தமிழில் “நீ நான் காதல்” என்ற பெயரில் ரீமேக் செய்ய இருக்கிறது. இந்த சீரியலில் நடிகர் சங்கரேஷ் மற்றும் நடிகை சாய் காயத்ரி இருவரும் இரண்டாவது ஹீரோ மற்றும் ஹீரோயினாக நடிக்க இருக்கின்றனர். காற்றுக்கென்ன வேலி சீரியலின் கதாநாயகனாக இருக்கும் சுவாமிநாதன் நுவ்வு நேனா பிரேமா சீரியலின் கதாநாயகனாக நடிக்கிறார். அவரே தமிழ் ரீமேக்கிலும் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் இதில் ஹீரோயினாக புதுமுக நடிகை ஒருவர் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.!

 

View this post on Instagram

 

A post shared by TSE 🤩 (@tamil_serials_exclusive)

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment