சரவணா ஸ்டோர்ஸ் ஓனரான தி லெஜெண்ட் சரவணன் அறிமுகமாகியுள்ள படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. ஜோடி ஜெர்ரி இயக்கத்தில் லெஜெண்ட் சரவணன், ஊர்வசி ரவுதேலா, லட்சுமி ராய், விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் தான் தி லெஜன்ட். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 2500 திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தில் மட்டும் சுமார் 800 திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. அதிகாலை 4 மணிக்கு ஒளிபரப்பப்பட்ட ஷோ 650 திரையரங்குகளில் ஹவுஸ் புல் ஆகியிருந்தது. சென்னையில் மிகப் பெரிய ஜவுளி சாம்ராஜ்யமாக இருப்பது சரவணா ஸ்டோர்ஸ். பின்னாளில் இது வீட்டிற்கு தேவையான உபயோகப் பொருட்கள் தொடங்கி அனைத்தும் விற்பனை செய்யும் இடமாக மாறியது. பிரம்மாண்டம் என்றாலே சரவணா ஸ்டோர்ஸ் என்னும் அளவிற்கு அனைத்து வகையான பொருட்களும் கிடைக்கும் இடமாக விளங்குகிறது.

இந்த கடையின் உரிமையாளர் அருள் சரவணன், தனது கடையின் விளம்பரங்களில் ஹன்சிகா தமன்னா போன்ற முன்னணி நடிகைகளுடன் தோன்றி நடித்தார். இதனால் அவரை பலரும் உருவ கேலி செய்து கலாய்த்து தள்ளினர். அதைப்பற்றி எல்லாம் கண்டுகொள்ளாத சரவணன் அடுத்த கட்டமாக படங்களில் நடிக்கும் ஆசையில், சரவணா ஸ்டோர்ஸ் ப்ரோடக்ஷன்ஸ் என்ற பெயரில் தானே ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி “தி லெஜெண்ட்” என்ற படத்தில் நடித்தார். சமீபத்தில் அந்த படத்தின் டீசர் ட்ரெய்லர் என வெளியாகி முப்பது மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டிருந்த நிலையில், படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இந்த நிலையில் இன்று உலகம் முழுவதும் 2500 தியேட்டர்களிலும் தமிழகத்தில் மட்டும் 800 தியேட்டர்களிலும் ஐந்து மொழிகளில் இந்த படம் வெளியாகி உள்ளது. படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் காலை நான்கு மணி காட்சிகள் எல்லாம் சுமார் 650 தியேட்டர்கள் நிரம்பி வழிந்தன.
அதிகாலை காட்சியை பார்த்துவிட்டு பலரும் விமர்சனங்களை பகிர்ந்து வருகின்றனர். கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது தி லெஜன்ட் படம். சிலர் அண்ணாச்சியின் முயற்சியை பாராட்டி இருக்கின்றனர். சிலர் அவர் நடிப்பை கழுவி ஊற்றி வருகின்றனர். உங்கள் நண்பர்கள் குழு உடன் போங்கள், சத்தமாக சிரியுங்கள், இந்த படம் மிகப்பெரிய ஸ்ட்ரெஸ் பஸ்டர், உங்களால் சிரிப்பை அடக்கவே முடியாது என்று நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். படம் பார்த்துவிட்டு வெளியே வந்த பலரும் படம் சுமாராக இருக்கிறது என்றும், பல இடங்களில் போர் அடிப்பதாகவும், 3 மணி நேரம் நன்றாக தூங்கலாம் என்றும் கருத்து கூறினர். சிலர் பாடல்கள் மட்டுமே நன்றாக இருக்கிறது. ஆக்சன் காட்சிகளில் சிரிப்பு தான் வருகிறது என்றும் கூறினர்.
View Comments
Move supper congratulations annache💯👌👌