அபியுடன் ரொமான்ஸ் செய்யும் வெற்றி.! அபியை அலேக்காக தூக்கிக்கொண்டு போன வெற்றி.!

வெளியிட்டது

தென்றல் வந்து என்னை தொடும் தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் அபியை ஊருக்கு அழைத்துச் சென்ற வெற்றிக்கு தற்போது முதலிரவு ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தென்றல் வந்து என்னை தொடும் தொடர் பலரின் மனம் கவர்ந்த தொடராக இருந்து வருகிறது. இந்தத் தொடரில் கதாநாயகனாக இருக்கும் வெற்றி, அபி என்பவரை திருமணம் செய்து கொள்கிறார். இவர்களின் திருமண வாழ்க்கை சுமூகமாக இல்லை. ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்து வருகின்றனர். பிரிந்து சென்ற பிறகு அபி படித்து மாவட்டத்தின் கலெக்டராக உயர்ந்திருக்கிறார். ஆனால் வெற்றி ரவுடியாகவே இருக்கிறார். பின்னர் ஒரு கட்டத்தில் வெற்றிக்கும் அபிக்கும் பிறந்த குழந்தை சுடர் மூலமாக அறிமுகம் கிடைக்கிறது. இருவரும் தற்போது மீண்டும் இணைந்து இருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அபியுடன் ரொமான்ஸ் செய்யும் வெற்றி.! அபியை அலேக்காக தூக்கிக்கொண்டு போன வெற்றி.! 1
சுடரும் வெற்றியும் நெருங்கி பழகுவது அபிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அவர்கள் இருவரும் சேரக்கூடாது என்று அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அபியே வெற்றியுடன் அவரது சொந்த ஊருக்கு சென்றிருக்கிறார். வெற்றியின் தந்தை அபிக்கு குலதெய்வ கோயிலில் முதல் மரியாதை கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அவர் இறந்துவிட்டதால் அப்பாவின் அசையை நிறைவேற்ற வெற்றி அபியை அழைத்துக்கொண்டு சொந்த ஊருக்கு சென்றிருக்கிறார். அங்கு அவர்கள் இருவருக்கும் நல்ல நட்பு ஏற்படுகிறது. தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அபி மற்றும் வெற்றியை ஊர்மக்கள் அமர வைத்து ஒருவருக்கொருவர் சந்தனம் பூசிக்கொள்ள செய்கின்றனர். பின்னர் அபியை தூக்கிக்கொண்டு வெற்றி அறைக்குள் செல்கிறார்.

அங்கு அவர்களுக்கு முதலிரவு ஏற்பாடுகள் நடைபெற இருக்கிறது. இந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்