வாகன சோதனையில் போலீஸிடம் வசமாக மாட்டிய வெற்றி.! இப்ப எப்படி தப்பிக்க போறாருனு தெரிலயே.!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் சுடரை அழைத்துக் கொண்டு தற்போது ஊட்டிக்கு டூருக்கு சென்றிருந்த வெற்றி தற்போது போலீசாரிடம் மாட்டிக் கொண்டிருக்கிறார். அந்த அதிரடியான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அவர் போலீஸிடம் இருந்து தப்பித்து வருவாரா? இல்லை போலீஸிடம் மாட்டிக் கொள்வாரா? என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் தொடர் அடுத்த பரபரப்பான கட்டங்களை எட்டி வருகிறது. அதன்படி சுடர் தனக்கும் அபிக்கும் பிறந்த மகள் தான் என்கிற உண்மையை வெற்றி மிகவும் கஷ்டப்பட்டு தெரிந்து கொண்டார். அதன் பின்னர் சென்னைக்கு வந்த அவர் அபியிடம் கூறாமலேயே சுடரை தற்போது ஊட்டிக்கு டூருக்காக அழைத்துச் சென்றிருக்கிறார். இந்த விஷயத்தை தெரிந்து கொள்ளும் அபி வெற்றியின் மீது கடும் கோபத்தில் இருக்கிறார். ப்ரோமோ வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வாகன சோதனையில் போலீஸிடம் வசமாக மாட்டிய வெற்றி.! இப்ப எப்படி தப்பிக்க போறாருனு தெரிலயே.! 1

வெற்றி தன்னுடைய மகளை கடத்திக்கொண்டு சென்று விட்டதாக அபி தற்போது கடும் கோபத்தில் இருக்கிறார். மேலும் போலீசாரை விட்டு தேடவும் சொல்லி இருக்கிறார். ஆனால் வெற்றியும் சுடரும் ஜாலியாக ஊட்டியில் சுற்றித் திரிகின்றனர். இதற்கிடையே தற்போது வெற்றி சுடரை அழைத்துக் கொண்டு காரில் சென்று கொண்டிருக்கிறார். அப்போது அங்கு போலீசார் வெற்றி மற்றும் சுடரின் புகைப்படங்களை கையில் வைத்துக்கொண்டு சோதனை நடத்திக் கொண்டிருக்கின்றனர். வெற்றி சுடரை கடத்திக் கொண்டு வந்து விட்டதாக அவர்கள் புகைப்படங்களை வைத்துக்கொண்டு பலரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் வெற்றி தற்போது சுடரை பார்த்து நீ இந்த காருக்கு கீழே ஒளிந்து கொள்கிறாயா? யாராவது கேட்டால் நான் இது புளி மூட்டை என்று பொய் சொல்கிறேன் என்று சொல்லி விளையாட்டு நடத்துவது போல் நடத்துகிறார். சுடரும் அதேபோல் காருக்கு அடியில் ஒளிந்து கொள்ள, அவரை துண்டை வைத்து வெற்றி மூடி வைக்கிறார். பின்னர் தானும் முகமூடி ஒன்றை அணிந்து கொள்கிறார்.

அப்போது போலீசார் அருகில் வந்து இந்த நபரையும் குழந்தையையும் தெரியுமா இந்த நபர் குழந்தையை கடத்திக் கொண்டு வந்து விட்டான் என்று கூறுகிறார். முகமூடி அணிந்திருக்கும் வெற்றியை தெரியாது என்று சொல்லிவிட்டு இரும தொடங்குகிறார். நீ எதற்காக இப்பொழுது இருமுகிறாய், நீ உன் முகமூடியை கழட்டு என்று சொல்லி போலீசார் வெற்றியை மிரட்டுகிறார். முகமூடியை கழட்டினால் எப்படியும் வெற்றி மாட்டிக்கொள்வார். இதிலிருந்து வெற்றி எப்படி தப்பிக்க போகிறார் என்பது தெரியவில்லை. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்