தென்றல் வந்து என்னை தொடும் தொடரில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் சுடர் மற்றும் அபி இருவருக்கும் சிலம்பம் சொல்லித் தரும் சிலம்பம் மாஸ்டராக தற்போது மீண்டும் வெற்றி மீண்டும் அபியின் வீட்டிற்குள் நுழைந்திருக்கிறார். அந்த ப்ரோமோவை தற்போது விஜய் தொலைக்காட்சி வெளியிட்டு இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் தொடர் சற்று வித்தியாசமான கதையம்சம் கொண்டது. மிகப்பெரிய ரவுடியாக இருக்கும் வெற்றி பிரபல வக்கீலின் மகளாக இருக்கும் அபியை கோவிலில் வைத்து எதேச்சையாக தாலி கட்டி விடுகிறார். அங்கிருந்து இந்த கதை தொடங்கியது. இந்த கதை முடிவுக்கு வரும் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் கதையில் திடீர் திருப்பமாக அபி கலெக்டர் ஆகி இருப்பது போலவும், வெற்றி மற்றும் அபி தம்பதிகளுக்கு சுடர் என்கிற குழந்தை பிறந்து இருப்பது போலவும் கதையை மாற்றி அமைத்திருந்தனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது வெற்றிக்கும் அபிக்கும் பிறந்த குழந்தைதான் சுடர் என்கிற உண்மையை இத்தனை நாட்களாக வெற்றியிடம் சொல்லாமல் மறைத்து வைத்திருந்தனர். இதை வெற்றி தற்போது மிகவும் சிரமப்பட்டு கண்டுபிடித்து இருக்கிறார். சுடர் தனக்கு பிறந்த மகள் என்பதை வெற்றி தெரிந்து கொண்ட பின்னர் கதையில் சுவாரஸ்யம் அதிகமானது. பின்னர் வெற்றி சுடரை அழைத்துக் கொண்டு ஊட்டி கொடைக்கானல் என டூருக்கு சென்று வந்தார். சுடரை சிலர் கடத்தியதாகவும் அவர்களிடமிருந்து தான்தான் சுடரை மீட்டு வந்துதாகவும் வெற்றி அபியிடம் பொய் சொல்கிறார். அதை நம்பும் அபிக்கு வெற்றி மீது ஒரு கரிசனம் வருகிறது. இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அபி வீட்டில் வேலை செய்யும் ஒருவரிடம் சிலம்பம் மாஸ்டரை அழைத்து வருமாறு கூறுகிறார். சுடருக்கு தற்காப்பு கலையை கற்றுக் கொடுக்க சிலம்பம் கற்றுத் தர வேண்டும் என்று அபி முடிவெடுத்திருக்கிறார்.
அப்போது சிலம்பம் மாஸ்டராக மீண்டும் அபிபின் வீட்டிற்குள் நுழைகிறார் வெற்றி. அங்கு சுடருக்கு சிலம்பம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும்போது, சுடர் அபியையும் அழைத்து நீயும் கற்றுக் கொள் என்று கூறுகிறார். பின்னர் அபிக்கு வெற்றி சிலம்பம் கற்றுக் கொடுக்கிறார். அப்போது அபியின் கைகளைப் பிடித்து சிலம்பம் சொல்லிக் கொடுக்கிறார் வெற்றி. இதனால் மீண்டும் அபியும் வெற்றியும் விரைவில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Vijay Television