வெற்றிக்கு கண்ணில் அடிபட்டவுடன் துடிதுடித்து போன அபி.! உண்மையான காதல்ன்னா இதுதான்.!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தற்போது மீண்டும் வெற்றிக்கும் அபிக்கும் காதல் மலரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெற்றிக்கு ஆபத்து என்றவுடன் அபி துடிதுடித்து போயிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டங்களுடன் நடைபெற்று வருகிறது.

வெற்றிக்கு கண்ணில் அடிபட்டவுடன் துடிதுடித்து போன அபி.! உண்மையான காதல்ன்னா இதுதான்.! 1

இந்த சீரியலில் வினோத் பாபு கதாநாயகனாகவும் வஅதற்கு என்ற கதாபாத்திரத்திலும், நடிகை பவித்ரா ஜனனி கதாநாயகியாகவும் நடித்து வருகின்றனர். தற்போது கதைப் படி இவர்களுக்கு சுடர் என்ற குழந்தையும் பிறந்திருக்கிறது. இத்தனை நாட்களாக சுடர் தான் பெற்ற மகள் என்பதை தெரிந்து கொள்ளாமல் இருந்த வெற்றி தற்போது மிகவும் கஷ்டப்பட்டு சுடர் தனக்கும் அபிக்கும் பிறந்த குழந்தைதான் என்பதை தெரிந்து கொண்டிருக்கிறார். மேலும் சுடரை பாதுகாத்துக் கொள்வதற்காக அவரது வீட்டிற்கு சென்று சிலம்பமும் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் வெற்றியை தனது மகள் சுடருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்.

 

அப்போது இந்த உலகில் பெண்களை கடத்துபவர்கள் பலர் இருக்கிறார்கள் என்று கூறுகிறார். அதற்கு என்னையும் கடத்துவார்களா என்று சுடர் கேட்கிறார். ஆமாம் என்று வெற்றி பதிலளிக்கிறார். அதற்கு சுடர் அப்படி என்னை கடத்திவிட்டால் நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறார். அதற்கு வெற்றி பெப்பர் ஸ்பிரேவை எடுத்து அடித்துக் காட்டுகிறார். அப்போது தெரியாமல் அவர் முகத்தில் அடித்துக் கொள்கிறார். அப்போது அபி துடிதுடித்து போகிறார். வெற்றியின் கண்ணில் தண்ணீரை ஊற்றுகிறார். பின்னர் விஜியிடம் சொல்லி பாலை எடுத்து வரச் சொல்லி கண்களில் ஊற்றுகிறார்.

இந்த ப்ரோமோவை பார்த்த பலரும் மீண்டும் வெற்றியும் அபியும் இணைய வேண்டும் என்று தங்களது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.!

Youtube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்