பிரபல சுய பாடகர் ஆன தெருக்குரல் அறிவு தற்போது தனது காதலியை அறிமுகப்படுத்தி இருக்கிறார். என்ஜாய் என்ஜாமி என்கிற பாடலின் மூலமாக பிரபலமானவர் தெருக்குரல்அறிவு. அவர் அதற்கு முன்பே ரஜினிகாந்த் பா. ரஞ்சித் கூட்டணியில் உருவான காலா படத்தில் உரிமையை மீட்போம் என்ற பாடலை எழுதியதன் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமானார். பின்னர் அவர் விஜயின் மாஸ்டர் படத்தில் வந்த வாத்தி ரெய்டு என்ற பாடலையும் எழுதி இருந்தார். இவர் பாடல் ஆசிரியராகவும், பாடகராகவும் பணியாற்றி வருகிறார். இதுபோக பல ஆல்பம் பாடல்களை தானே எழுதி இயக்கி பாடி இருக்கிறார். கடந்த ஆண்டு வெளியாகி பல மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த என்ஜாய் என்ஜாமி என்ற பாடலையும் இவர் தான் எழுதி, இயக்கி அதில் பாடியும் இருந்தார்.

இந்த ஆல்பம் தமிழர்கள் மட்டுமல்லாது பல உலகங்களில் வாழும் மக்களிடையே பிரபலமானது. மேலும் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியிலும் இந்த பாடல் ஒளிபரப்பப்பட்டது. ஆனால் இதில் அறிவு இடம்பெறவில்லை. இதனால் சர்ச்சை எழுந்தது. இது இந்த சண்டை தொடர்பாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அவரது மகள் பாடகி தீ மற்றும் அறிவுக்கும் சில பிரச்சனைகள் நடந்தது. பின்னர் இந்த பிரச்சினைகள் எல்லாம் ஓய்ந்து விட்டது. தற்போது அறிவு வெளிநாடுகளில் தனது இசைக்கச்சேரிகளை நடத்தி வருகிறார். தொடர்ந்து சில படங்களில் பாடியும் பல படங்களுக்கு பாடல்கள் எழுதியும் வருகிறார். இந்த நிலையில் அறிவு தற்போது தான் காதலிக்கும் பெண் பற்றிய தகவல்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கிறார்.
அதில் அவர் என் திமிரான தமிழச்சி என்று குறிப்பிட்டு கல்பனா அம்பேத்கர் என்கிற பெண்ணை காதலிப்பதாக புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். கல்பனா அம்பேத்கர் மார்கழியில் நடந்து வரும் “மார்கழி மக்களிசை” என்கிற கலை திருவிழாவின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார். இந்த குழு பா.ரஞ்சித் மற்றும் அவரது நீலம் பண்பாட்டு மையத்தின் சார்பாக ஒருங்கிணைக்கப்பட்டு வழி நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அறிவு மற்றும் கல்பனாவிற்கு நெட்டிசன்கள் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.