நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் திருச்சிற்றம்பலம். இது ஆகஸ்ட் 18ஆம் தேதி தமிழகம் எங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். இவர் கடைசியாக நடித்த மாறன், ஜகமே தந்திரம், ஹிந்தியில் அட்ராங்கி ரே போன்ற படங்கள் சரியாக ஓடவில்லை. பின்னர் அவர் ஆங்கில திரைப்படமான தி கிரே மேன் படத்திலும் நடித்துள்ளார். கர்ணன் படத்திற்குப் பின்னர் வெளியான அனைத்து படங்களுமே ஓடிடி தளத்தில் வெளியானதால் திருச்சிற்றம்பலத்திற்கான எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

இந்த படத்தை இயக்குனர் மித்ரன் ஜவஹர் அவர்கள் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன், ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர் போன்ற மூவர் நடித்துள்ளனர். ஏழு வருடங்களுக்குப் பிறகு இந்த படத்தில் தனுசு உடன் அனிருத் இணைந்திருக்கிறார். மேலும் இந்த படத்தின் டிரைலர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் டெலிவரிபாயாக வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். நித்தியாமேனன் அவருக்கு நல்ல தோழியாக இருக்கிறார். மேலும் இந்த படத்தில் இருந்து மூன்று பாடல்கள் வெளியாகியிருந்தது. முதலாவதாக தாய்க்கிழவி பாடலும், இரண்டாவதாக மேகம் கருக்காதா என்ற பாடலும், மூன்றாவதாக லைப் ஆஃப் பழம் என்ற பாடலும் வெளியாகி இருந்தது.
இதில் தாய்க்கிழவி பாடலும், மேகம் கருக்குதா பாடலும் வேத லெவலில் ஹிட் அடித்து இருந்தது .இந்த பாடல்களுக்கு instagram-யில் பலரும் ரீல்ஸ் செய்து வீடியோக்களை பதிவேற்றி வந்தனர். இந்த நிலையில் படத்திலிருந்து சில ப்ரோமோ காட்சிகள் வெளியாகி இருக்கிறது. அந்த ப்ரோமோ காட்சிகளை நீங்களும் காண.. Watch the below video..
Youtube Video Code Embed Credits: Sun TV