சினிமா எப்போதும் சர்ச்சைகளும், பரபரப்புக்கும் பெயர் போன்றதாகும். ஒரு படம் வெளிவந்தால், அதில் அரசியல் பேசப்பட்டிருந்தால் ஒரு வித பிரச்சனை, தனி நபரை குறிப்பிட்டு இருந்தால் வேறு ஒரு பிரச்சனை, என அங்கும் இங்கும் என எங்கு அலைந்தாலும் சினிமாவிற்கு பிரச்சனைகள் வருவது சகஜமே. அதிலும் சில நடிகர்களுக்கு பெரும்பாலும் ஏதாவது ஒருகருத்துக்கூறினாலே பிரச்சனை தான். இதனை ஒதுக்கிவைத்து நல்லபடியாக படம் பண்ண நினைத்தாலும், பிரச்சனைகள் அவர்களை அறியாமலே அவர்களை அடைந்துவிடும்.

நடிகர் தனுஷ், சினிமாவின் அதிகபட்ச உச்சத்தை அடைந்துள்ளார். ஹிந்தியில் ஆங்கிலத்தில் என அனைத்து மொழி படங்களிலும் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி, மிக பெரிய அளவில் தன்னுடைய ஆளுமையை வெளிப்படுத்தினார். தற்போது இவர் நடிப்பில் மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கத்தில் “திருச்சிற்றம்பலம்” படத்தில் நடித்துள்ளார். படத்தில் 8 ஆண்டுகள் பின்பு தனுஷ்சும் இசையமைப்பாளர் அனிருத் கூட்டணி மீண்டும் இணைகிறது. அதுவே இந்த படத்திற்கு மிக பெரிய அளவில் எதிர்ப்பரப்பை உருவாக்கி வைத்துள்ளது.
3 படம் மூலம் அறிமுகமான அனிருத் தொடர்ந்து நடிகர் தனுஷிற்கு வேலையில்லா பட்டதாரி, மாரி, தங்கமகன் என தொடர் வெற்றி ஆல்பங்களை அளித்துள்ளார். மீண்டும் இவர்கள் இணைவதில் இருந்து படத்தின் எதிர்பார்ப்பு எகிற, முதல் பாடலாக தனுஷ் எழுதி, பாடியுள்ள “தாய்கிழவி” பாடல் அண்மையில் வெளியானது. பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. நடிகர் தனுஷுடன் இந்த படத்தில் ராஷி கண்ணா, பிரியா ஷங்கர், நித்யா மேனன், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் என பலர் நடித்துள்ளனர். இப்பொது வெளியாகி ட்ரெண்டாகி வரும் இந்த பாடல் பிரச்சனைக்கு உள்ளாகியுள்ளது.
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நல சங்கத்தின் நிறுவன தலைவரான சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது “வயதான உறவுகளை தாத்தா பாட்டி என்று அழைத்த காலம் உள்ளது,அதனை சீரழிக்கும் விதமாக தாய்க்கிழவி என்ற பாடல் வெளியாகியுள்ளது.,தவறான வரிகளை கொண்டு பாடல் எழுதிய தனுஷுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறோம் மேலும் தாய்க்கிழவி எனும் வரியினை நீக்கி பாடலை வெளியிட வேண்டும்” என கோரிக்கை எழுப்பியுள்ளனர். அந்த பாடல் நீங்களும் கேட்க…
Video Courtesy -SunTV